காஷ்மீர் சட்ட சபைக்கு வருகிற 25–ந்தேதி தொடங்கி 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று வேட்பு னு தாக்கல் தொடங்கியது. கடந்த 2008 சட்ட சபை தேர்தலில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் தேசியமாநாட்டு கட்சி 28 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க 11 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனால் தேசியமாநாட்டு கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 6 தொகுதியில் பா.ஜ.க 3 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. நேற்று முதல்கட்டமாக 45 வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது.
காஷ்மீரில் ஆட்சியைபிடிக்க 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதேவை. இதனால் பா.ஜ.க 'மிஷன் – 44' (44 இடங்களில் வெற்றி இலக்கு) என்ற கோஷத்துடன் பிரசாரகளத்தில் இறங்கியுள்ளது.
காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மூத்த தலைவர்கள் பிரசாரம்செய்ய உள்ளனர்.
பிரதமர் மோடி வருகிற 10–ந்தேதி (திங்கட்கிழமை) காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று தேர்தல்பிரசார கூட்டங்களில் பேசுகிறார். மொத்தம் 8 கூட்டங்களில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் பிரசாரம் காஷ்மீரில் பா.ஜ.க வுக்கு மிகப் பெரிய பலம் அளிக்கும் என்றும், மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றுவோம் என்றும் மாநிலபொறுப்பாளர் அவினாஷ் ராய் கன்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.