7கோடியை தொட்டுவிட்ட வங்கி கணக்கு

 பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தில், சுமார் 7கோடி பேருக்கு வங்கிகணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. சரா சரியாக ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ. 750 என்ற வகையில் மொத்தம் ரூ.5300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்கள் ஏழைமக்களை சென்றடையவும், அவர்கள் தொழில் தொடங்க கடன்பெறுவது உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகணக்கு தொடங்குவது அவசியம் என சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இதையடுத்து, ஏழைகளுக்கு வங்கிகணக்கு தொடங்கும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தை கடந்த ஆகஸ்டுமாதம் 29ம் தேதி பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்துக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. வங்கி ஊழியர்கள், சமூகநல ஆர்வலர்கள் உதவியுடன் ஏராளமான ஏழைமக்கள் வங்கி கணக்கை தொடங்கினர். இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ், கடந்த நவம்பர் 3ம்தேதி வரை நாடுமுழுவதும் 6.98 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கிகணக்கில் இதுவரை ரூ.5,300 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் கணக்கிலும் ஆரம்பத்தில் சராசரியாக ரூ. 500 இருப்பு இருந்தது.

தற்போது இந்ததொகை ரூ. 750 ஆக அதிகரித்துள்ளது. வங்கிகணக்கு தொடங்கியவர்களில் 4 கோடி பேருக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சியவர்களுக்கு இன்னும் சிலவாரங்களில் வழங்கப்பட உள்ளன.அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி வங்கிகணக்குகள் தொடங்க மத்திய அரசு அளவுகோல் நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், தற்போது சுமார் 7 கோடி அளவுக்கு வங்கிகணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விரைவில் எட்டிவிட முடியும் என மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...