ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி

 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவையொட்டி, மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த எஸ்.டி.சந்தோஷம், தென்காசியைச் சேர்ந்த டி.கணேசன், கரூரைச் சேர்ந்த ராஜ கோபாலன், கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன், கன்னியா குமரியைச் சேர்ந்த எஸ்.ஜோதின்தரன், சென்னையைச் சேர்ந்த துரைசங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

அந்தமனுக்களில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டுவிழா வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவையொட்டி, எங்களது மாவட்டத்தில் பேரணிநடத்த உள்ளூர் போலீஸாரிடம் அனுமதி கோரி மனு அளித்தோம். ஆனால், போலீஸார் அனுமதிவழங்க மறுத்துவிட்டனர். உள்ளூர் போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்க உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்தமனுக்கள் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி தாக்கல் செய்த பதில் மனுவில், "இது போன்ற பேரணிகளுக்குத் தடைவிதிக்க சென்னை மாநகர காவல்சட்டம், தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தின் கீழ், மாநகர காவல் ஆணையர், எஸ்.பி. ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய மாநில புலானய்வு துறை யிலிருந்து தகவல்கள் வந்துள்ளன. மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சீருடை அணிந்து, கையில் கம்பு ஏந்தி செல்வார்கள் என்பதால், பேரணிக்கு அனுமதி வழங்கப் படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், பேரணியின்போது அது போன்று கம்புகள் ஏந்த மாட்டோம். வன்முறையை தூண்டும்வகையிலோ அல்லது யாரையும் காயப்படுத்தும் வகையிலோ கோஷம் எழுப்பமாட்டோம். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசுதரப்பு கருத்துக்களை நிராகரித்த நீதிபதி, மனுதாரர்கள் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கவும், பேரணி-பொதுக் கூட்டம் நடத்த இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...