தமிழக முதல்வருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது; குறுகியகாலத்தில், தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்று , மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி : மத்திய தரைவழி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று, சென்னை, கோட்டையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து பேசினார். பின், நிருபர்களிடம் கூறியதாவது: சந்திப்பு மகிழ்ச்சி தரும்வகையில் இருந்தது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அமையும் என்று , நம்புகிறேன். நான் சார்ந்துள்ள துறைமூலமாக, தமிழகத்தில் எந்தெந்த திட்டங்களை எல்லாம் கொண்டுவர முடியும் என, தெரிவித்தேன். அவரும் முறையாக ஆலோசித்து உதவுவதாக தெரிவித்துள்ளார். குறுகியகாலத்திற்குள் தமிழகத்திற்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. துவக்கப்பட்டு நிற்கும், சென்னை துறைமுகம் – மதுர வாயல் மேம்பால சாலைத் திட்டம், சென்னை – எண்ணூர் துறை முகங்கள் இணைப்பு சாலைத்திட்டம் குறித்தும், பல்வேறு திட்டங்களுக்கு, நிலம் எடுப்பதில் உள்ள பிரச்னைகள், சாலைப் பணிக்கான ஜல்லி, மணல் எடுக்கும் பிரச்னை குறித்தும் தெரிவித்தேன்.
பயம் தேவையில்லை : குளச்சல் துறை முகத்தை, மத்திய அரசு எடுத்து, நடத்த தயாராக உள்ளதாக, அமைச்சர் நிதின்கட்காரி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்தும் தெரிவித்தேன். 'கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர் தெரிவித்துள்ளார். இந்ததிட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
தமிழக மீனவர் பிரச்னையை, பிரதமரே கையில் எடுத்து, முழுகவனம் செலுத்தி வருகிறார். யாரும் பயம்கொள்ளத் தேவையில்லை. என்று , அவர் கூறினார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.