தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக மாறியுள்ளது

 தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக மாறியுள்ளது, பல்வேறு கட்சியினர் பாஜவில் இணைந்து வருவது கட்சிக்கு மேலும் உற்சாகத்தையும், வலுவையும் ஏற்படுத்தியுள்ளது. என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

14 கிராமங்களை சேர்ந்த ஆதி ஆந்திரா மக்கள் பாஜவில் இணையும் நிகழ்ச்சி தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஆதி ஆந்திரா மக்கள் இயக்க தலைவர் நாகேஷ் தலைமையில் அவர்கள் வந்திருந்தனர். வடசென்னை மாவட்ட பாஜ தலைவர் பிரகாஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கட்சியில் இணைந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கட்சியின் உறுப்பினர் அட்டைகளை வழங்கினர்.

அதன் பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'தமிழகத்தில் பாஜ மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. பல்வேறு கட்சியினர் பாஜவில் இணைந்து வருவது கட்சிக்கு மேலும் உற்சாகத்தையும், வலுவையும் ஏற்படுத்தியுள்ளது. 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். மோடி தலைமையில் நல்லாட்சி அமையும்' என்றார்.இந்நிகழ்ச்சியில், பாஜ அமைப்பு பொது செயலாளர் மோகன்ராஜுலு, பாஜ துணை தலைவர் சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். –

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...