பிரிவு 370 காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடை

 எல்லையில் மீண்டும் சீன ஊடுருவல் தொடர்ந்தால் அது இந்தியாவுடனான நல்லுறவை பாதிக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காஷ்மீரில் லே பகுதியில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 காரணமாக மேம்பாட்டுதிட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே மக்கள் பாஜக.,வுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் 73வது சட்டதிருத்தத்தை அமல்படுத்த முடியும்.

சீனா சட்ட விரோதமாக அக்சாய் சின் பகுதியில் ஊடுருவியுள்ளது. சீன ராணுவத்தினர் அடிக்கடி இதுபோல ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்தியாவுடனான நல்லுறவு பாதிக்கும். அண்டைநாடுகளுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது.

இரண்டு நாடுகளும் எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொண்டால் நமது உறவில் புதிய உச்சங்களை எட்டமுடியும். அப்பகுதியில் முன்பு ஊடுருவல்செய்த பாகிஸ்தான் தற்போது அதனை 'பரிசாக' சீனாவுக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய தேசிய மாநாட்டு கட்சி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க தவறி விட்டது. அதேபோல் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இதனை பனி பாலைவனமாக்கியதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளின் காரணமாகவே சீனாவு டனான எல்லை விவகாரம் சுதந்திரம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாமல் உள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...