அடுத்த கல்வியாண்டு முதல், நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாகசேர்க்க, மத்திய அரசு திட்டம்மிட்டுள்ளது.
மத்திய யோகா மற்றும் ஆயுர் வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது:
யோகா கலையை கற்பதன்மூலம் இளம் தலை முறையினர், எதிர் காலத்தில் நல்லபண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் யோகாவை ஒருபாடமாக சேர்க்கும் படி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு, சாதகமான பதில் கிடைத்தால், வரும் ஜூன் மாதத்திற்குள், இந்ததிட்டத்தை அமல் படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியும், இந்த திட்டத்துக்கு அனுமதி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடம் ஆலோசனைகள் கேட்கப்படும். நம்முடைய பாரம் பரிய கலைகளையும், மருத்துவ முறைகளையும் மறந்துவிட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் நம்முடைய கலைகளையும், மருத்துவ முறை களையும் பின்பற்றி, வளர்ச்சி அடைந்துவிட்டன. அடுத்த கட்டமாக, அனைத்து கிராமங்களிலும் ஆயுர் வேத மையங்களையும் துவக்க திட்டமிட்டுள்ளோம். என்று அவர் கூறினார்.
மத்திய பிரதேச மாநில பாஜக., அரசு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை, அனைத்து பள்ளிகளிலும் யோகாவை ஒருபாடமாக சேர்த்து, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.