தமிழகத்தில் “மிஸ்டுகால்’ மூலம் ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் பாஜகவில் இணைந்தனர்

 தமிழகத்தில் "மிஸ்டுகால்' மூலம் 20 நாள்களில் ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித் துள்ளதாக, பாஜக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு தெரிவித்துள்ளார்.

பாஜக விதிகளின் படி, 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஏற்கெனவே, உறுப்பினர்களாக உள்ளவர்களும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். கடந்த 1-1-2009-இல் உறுப்பினர்களாக இணைந்தவர்களின் பதிவு 31-12-2014இல் முடிகிறது.

எனவே, புதிய உறுப்பினர்சேர்க்கை, புதுப்பிக்கும் பணி 2014 நவம்பர் 1 முதல் 2015 மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் நரேந்திரமோடியும், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் தில்லியில் நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி வைத்தனர்.

தகவல் தொழில்நுட்ப வசதியை பயன் படுத்தி உறுப்பினர் சேர்க்கை முழுவதையும் இணையதளம் மூலம் பாஜக விரிவுபடுத்தி வருகிறது. "மிஸ்டுகால்' மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க 180026620202 என்ற எண்ணை பாஜக அறிமுகப்படுத்தி யுள்ளது. இந்த எண் முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (டுவிட்டர்), வாட்ஸ் அப், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

உறுப்பினராகச் சேர விரும்பு பவர்கள் இந்த எண்ணுக்கு "மிஸ்டுகால்' கொடுத்தால் அடுத்த நொடியே அவர்களுக்கு ஒரு குறுஞ் செய்தி வரும். அதில் உள்ள எண்ணுக்கு முகவரி, தொலைபேசி எண்ணை அளித்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று ரூ.5 கட்டணத்தை பெற்றுக் கொண்டு உறுப்பினர் அட்டையை கட்சி நிர்வாகிகள் வழங்குவார்கள்.

இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாநில தலைவர்கள், மாநில அமைப்பு பொதுச் செயலாளர்களின் கூட்டம் தில்லியில் சனிக் கிழமை நடைபற்றது. கட்சித் தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக மோகன்ராஜூலு செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. "மிஸ்டு கால்' மூலம் முதல் 20 நாள்களில் ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் பாஜக.,வில் சேர விருப்பம் தெரிவித்து தங்களது முகவரியை குறுஞ் செய்தி மூலம் அனுப்பியுள்ளனர். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் பயிற்சிமுகாம்கள் நவம்பர் 24 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 11 இடங்களில் நடைபெறவுள்ளன.

"மிஸ்டுகால்' மூலம் முகவரி அளித்த வர்களையும், மற்றவர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க ஒரு கிளைக்கமிட்டிக்கு ஒருவர் வீதம் 30 ஆயிரம் கிளைகளுக்கு 30 ஆயிரம் பேரை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதற்கான நபர்களைக் கண்டறிய டிசம்பர் 1 முதல் 20-ம் தேதிவரை மாவட்ட அளவில் பயிற்சி முகாம்கள் நடைபெறும்.

டிசம்பர் 20-ம் தேதிக்கு பிறகே உறுப்பினர் சேர்க்கையை விரிவுப்படுத்த இருக்கிறோம். ஆனால், அதற்குள்ளே "மிஸ்டுகால்' மூலம் ஒருலட்சம் பேர் இணைந்திருப்பது எங்களை உற்சாகப்படுத்தி யுள்ளது. உறுப்பினர் விவரங்கள் அனைத்தும் www.bjptn.com என்ற இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப் படும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இணையதள வசதியுடன்கூடிய கம்ப்யூட்டர் அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...