ஒவ்வொரு படைப்பின்போதும் நான் புதிதாக பிறக்கிறேன்' என்றார் ஓவியப்பெருந்தகை வேணுகோபால் சர்மா, உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவரை தன் நாற்பது வருட உழைப்பின் முடிவில் 1964-ல் ஓவியமாக உலகத்துக்கு வார்த்தார் அவர்.
அந்த திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவுபெற்று, இந்த ஆண்டு வள்ளுவர் ஓவியத்தின் பொன்விழா ஆண்டு.
இதை மத்திய அரசு கொண்டாடும் என்ற உத்தரவாதத்தை கொடுத்து தமிழர்களை மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியிருக்கிறார் மாநிலங்களவை பி.ஜே.பி. எம்.பி.யான தருண் விஜய். கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொண்ட தருண் விஜய்…
சென்னைப் பல்கலைக் கழகத்தில், 'திருக்குறளின் தொடர்பியல் பரிமாணங்கள்' என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் நவம்பர் 12-ம் தேதி கலந்துகொண்டார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறை தலைவர் ரவீந்திரன் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வுக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் தாண்டவன் தலைமை வகித்துப் பேசினார்.
விழாவில் திருவள்ளுவர் ஓவியம் வரைந்த ஓவியர் வேணுகோபால் சர்மாவின் மகனும் எழுத்தாளரும் இயக்குனருமான ஸ்ரீராம் சர்மா பேசுகையில்,
"திருவள்ளுவரை தமிழ்த்தாயின் மூத்தமகனாக, நம் பேராசானாக ஒவ்வொருவரும் கொண்டாடுகிறோம். ஆனால் வடபுலத்தில் இன்று குரல் மழை பெய்துகொண்டிருகிறது.
'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டும் எல்லார்க்கும் பெய்யும் மழை' என்றார் வள்ளுவர். அவர் வாக்குப்படி வடபுலத்தில் இன்று குரல் மழை பெய்துகொண்டிருக்கிறது. அந்த மழைக்கு இந்திரனாக இறந்து அருளிக் கொண்டிருக்கிறவர் தருண் விஜய்.
திருவள்ளுவருக்குத் திருவுருவத்தைக் கொடுத்த ஓவியமேதை வேணுகோபால் சர்மாவின் மகன் என்ற சலுகையைப் பயபடுத்திக்கொண்டு தமிழ் கூறும் நல்லுலகு சார்பாக அவருக்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதேநேரம் ஒரு கோரிக்கையையும் அவரிடம் வைகிறேன். ஓவியர்களுக்கு என்று தேசிய விருது எதுவும் இல்லை. ஓவியர்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
விழாவில் பேசிய விசாகப்பட்டினம் மத்திய சுங்க மற்றும் சேவை வரித்துறை ஆணையர் ராஜேந்திரன்.
"ஓவியப்பெருந்தகை வேணுகோபால் சர்மாவுக்கு உரிய மரியாதையை மத்திய அரசு தயவுசெய்து கொடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறைத்தலைவர் ரவீந்திரன் பேசும்போது.
"இந்த திருவள்ளுவர் திருவுருவத்தைப் பாருங்கள். இவரை ஓர் இந்தியன் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளலாம். அமெரிக்கன் என்றால் கூட ஆம் என்று கூட சொல்லலாம். ஜப்பானிய குரு என்று நினைத்துப் பாருங்கள், அப்படியே தெரிவார். சீனத் துறவி என்று நினைத்துக் கொண்டு பாருங்கள். அப்படியே தெரிவார். அவ்வாறு உலகெல்லாம் பொருந்தக் கூடிய வள்ளுவரின் ஓவியம், உலகத்துக்கெல்லாம் பொருந்தக் கூடியதாகத் தீட்டியிருக்கிறார் ஓவியமேதை வேணுகோபால் சர்மா" என்று குறிப்பிட்டார்.
நிறைவுரையாற்றிய பி.ஜே.பி.யின் ராஜ்ய சபா எம்.பி.யான தருண் விஜய்.
திருவள்ளுவரின் குறள்பாக்கள் ஒவ்வொன்றும் உலகத்துக்கே பொருந்தக் கூடிய கருத்துகளைப் பெற்றுள்ளது. இந்தக் கருத்துக்களை அதிகாரிகளுக்கு பாடமாக வைக்கவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் பாடமாக்க வேண்டும்.
மகாத்மா காந்தி இந்திய தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். இன்று உலகெங்கும் இந்திய தூதரங்களில் காந்தியின் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மனதுக்கு ஆன்ம விடுதலை அளித்திருக்கிறார் திருவள்ளுவர். அந்த வகையில் பார்த்தால் திருவள்ளுவரே நம் உண்மையான தேசத் தந்தை. வள்ளுவரின் ஓவியத்தை உலகெங்கும் இந்திய தூதரகங்களில் வைத்திடவேண்டும்,
திருவள்ளுவரின் ஓவியத்துக்கு பொன்விழாவை மத்திய அரசு கொண்டாடுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறேன்" என்று முடித்தார் தருண் விஜய்.
விழா முடிகையில் நம்முடன் பேசிய வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா, "தருண் விஜய் அவர்களின் வாக்குறுதி மன மகிழ்வைத் தருகிறது. அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் நான் தொகுத்துள்ளேன். ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்துவருகிறேன். இந்த நூலை திருவள்ளுவர் திருவுருவ ஓவியப் பொன்விழா ஆண்டில் மத்திய அரசு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்" என்றார்.
தருண் விஜய் மூலமாக நல்லது நடந்தால் சரியே!
நன்றி : அரசியல்
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.