ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் எதிரானதல்ல. நாம் பல்வேறு யுத்தங்களை பற்றி படித்துள்ளோம். வெற்றி என்பது தர்மம், நியாயம், உண்மைக்குதான் கிடைத்துள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி பேசினார்.
ராஜேந்திர சோழன் முடிசூட்டிய 1000–ம் ஆண்டு விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தஞ்சை திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய பொதுச் செயலாளர் சுரேஷ்பையாஜி ஜோஷி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நமது தேசத்தில் மகத்தான சாதனைகளை செய்து பலநாடுகளுக்கு நமது அன்பு, பண்பாட்டை கொண்டுசென்று அங்கு பேரரசை நிறுவிய மன்னர்கள் வாழ்ந்த பூமி இந்த தஞ்சை. அந்த வகையில் ராஜேந்திர சோழனின் முடிசூட்டிய 1000–ம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம். நமது பயிற்சியில் தினமும் மன்னர்கள், சுதந்திர போராட்டவீரர், தியாகிகளை நினைவு கூறுகிறோம். அந்த வகையில் ராஜேந்திர சோழனையும் தினமும் நினைவு கூறுகிறோம்.
ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் எதிரானது அல்ல. நாம் பல்வேறு யுத்தங்களை குறித்து படித்துள்ளோம். வெற்றி என்பது தர்மம், நியாயம், உண்மைக்குதான் கிடைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். யாரையும் எதிர்க்காமல் 90 ஆண்டாக சேவைசெய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். யாருக்கும் எதிரி கிடையாது. இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். யாரையும் எதிர்க்கும் எண்ணம் நமக்கு கிடையாது.
ஆர்.எஸ்.எஸ். யாரையும் எதிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு அல்ல. நாட்டில் இந்து சமூகத்தில் ஒற்றுமையை உருவாக்க நேர்மையான வழியில் பணியாற்றி வருகிறோம். அந்தவகையில் நாம் தொடர்ந்து பணியாற்றி வளர்ச்சி பெற்றுவருகிறோம்.
உலக வரைபடத்தில் பலநாடுகள் உள்ளன. அதில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு என்று தனி நாடுகளை குறிப்பிட முடியும். ஆனால் இந்துக்களுக்குரிய நாடு பாரத நாடு மட்டும்தான். இது இந்து நாடுதான். நமது நாட்டில் எத்தனையோ வழிபாட்டு தலங்கள் உள்ளன. நமது நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கை குறையும் போதோ அல்லது பலவீனப் படும் போதோ நாடு திண்டாட்டம் அடைகிறது. இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் நாடு சக்திவாய்ந்த நாடாக வளரும். இந்துக்களை ஒற்றுமை, சக்தி, சாமர்த்தியம் நிறைந்தவர்களாக ஆக்குவதுதான் நாட்டை பாதுகாப்பதற்கான வழி. அதைத் தான் ஆர்.எஸ்.எஸ். செய்கிறது.
நாட்டில் பலபிரச்சினைகள் உள்ளன. மொழி, சாதி, சம்பிரதாயம், வழிபாடுகளில் பல பிரிவினைகள் உருவாகிவருகிறது. பிளவுபட்ட சமுதாயத்தை ஒற்றுமை ஆக்கவேண்டும். அப்போதுதான் நாம் சவால்களை தாண்டி வெற்றி அடைய முடியும். நமது நாட்டில் ஏற்படும் பிரச்சினை நமது வாழ்வோடு சம்பந்தப்பட்டவை. நாட்டில் உள்ள அனைவரையும் சார்ந்தவை. எனவே நாட்டில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்து பார்க்கவேண்டும். அப்போதுதான் சக்தி ஏற்படும். எனவே இதில் 2 வித கருத்துகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றார்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.