பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் மகிழ்சியும் இல்லை, வருத்தமும் இல்லை என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது மதிமுக. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தது. கூட்டணியில் அங்கம் வகித்தபோதும், தொடர்ந்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வந்தது மதிமுக. இதனால், வைகோவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மதிமுக உயர்மட்ட குழுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என அக்கட்சி முடிவு செய்தது. இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவிடம் செய்தியாளர்கள் கருத்துக்கேட்டனர். அதற்கு அவர், 'பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியது துரதிருஷ்டமானது என்ற போதிலும், வைகோவின் இந்தமுடிவு குறித்து பாஜக வருத்தப்படவும் இல்லை, மகிழ்ச்சி அடையவும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராகவும் அவர் ஆட்சேபகரமாக பேசியபோதும் நாங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டோம். எங்களுடனான உறவை ம.தி.மு.க. முறித்து கொண்டதால், தமிழ்நாட்டில் பாஜக.,வுக்கோ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது''எனத் தெரிவித்தார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.