அமெரிக்காவில் கவர்னர் பதவியை பிடித்துள்ள 2-வது இந்தியர்; நிக்கி ஹேலே

அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையுடன் சேர்ந்து 37 மாகாண கவர்னர் தேர்தல் நடந்தது. இதில் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு இந்திய வம்சா வழியை சேர்ந்த நிக்கி ஹேலே குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்
அவர் 52 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் வின்சென்ட் ஷேகாலுக்கு 47 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.
இந்திய வம்சாவழியை சேர்ந்த பாப்பிஜிந்தால் ஏற்கனவே லூசியானா மாநில கவர்னராக இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் கவர்னர் பதவியை பிடித்துள்ள 2-வது இந்தியர் ஆவார்.

இந்த வெற்றி குறித்து நிக்கி ஹேலே பேசியதாவது , “எனது வெற்றி மக்களின் உரிமை குரலுக்குக் கிடைத்த வெற்றி. எங்களுகாக உழைக்கும் அரசுதான் எங்களுக்கு வேண்டும் என மக்கள் கூறினார்கள். அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய நான் உழைப்பேன்.
மக்களுக்கு புதிய புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன். வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி தெற்கு கரோலினாவை முதல் மாநிலமாக மாற்றுவேன்.
எனது வெற்றி பெண்களுக்கு கிடைத்த பெருமையாகவும், அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு கிடைத்த பெருமையாகவும் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோன்று பிரதிநிதிகள் சபைக்கு (எம்.பி.) போட்டியிட்ட இந்தியர் மனான்திரிவேதியும், வெற்றி பெறும் நிலையில் இருக்கின்றார். இவர்கள் தவிர இன்னும் நான்கு இந்தியர்களும் பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டனர். ஆனால் அவர்கள் தோல்வி பெறும் நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...