2001–ம் ஆண்டு டிசம்பர் 13–ந் தேதி பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தசம்பவத்தில் 6 பாதுகாப்புபடை போலீசார் உள்பட 7 பேர் பலியானார்கள். தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தில் உயர்பாதுகாப்பு படை வீரர்களின் உருவப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உயிர்தியாகம் செய்தவர்களின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக டுவிட்டரில் மோடி கூறும்போது, நமது ஜனநாயகமான பாராளுமன்ற கோவிலை பாதுகாக்கும் பொருட்டு தங்களது உயிர்களை இழந்தவர் களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்களது தியாகம் நமதுநினைவில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.