இன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

 மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரதீர்வு காணப்படும் என பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; வருகிற 2016 –ல் நடை பெறும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க.,முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திக்கும் என்பதை கட்சிதலைவர் அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார். மேலும் முதல்வர் வேட்பாளர் பற்றி உரியநேரத்தில் கட்சி அறிவிக்கும்.

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. தி.மு.க. மற்றும் அதிமுக.வுக்கு மாற்றாக பா.ஜ.க அணி அமையும்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கொள்கைகளுக்கும் இந்து மகாசபா கட்சி கொள்கைக்கும் வேறுபாடு உள்ளது. இந்து மகாசபா இந்துக்கள் மட்டுமே நாட்டில் இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட கொள்கை கிடையாது.

நாடுமுழுவதும் மக்களால் போற்றப்படுகிற தேசத்தின் அடையாளமாக மகாத்மா காந்தி விளங்குகிறார். அவரை சுட்டுகொன்ற கோட்சேவுக்கு சிலை அமைக்கும் முயற்சி சரியானது அல்ல.

மன மாற்றம் மூலமே நடைபெறும் மதமாற்றத்தை பா.ஜ.க ஏற்றுகொள்ளும். ஆனால் ஆசையை காட்டி கட்டாய மதமாற்றம் செய்வது தண்டிக்கப்பட வேண்டும். இந்துக்களை மற்றமதங்களுக்கு மாற்றுகிறார்கள். ஆனால் இது பற்றி எந்த அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்க வில்லை.

கச்ச தீவை தானமாக வழங்கியது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி. சுமார் 40 ஆண்டுக்கு முன்னர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியிலும் மீன்பிடித்து வந்தனர். அதுபோன்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒரு சில அம்சங்கள் தவிர்த்து மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.