விஞ்ஞானிகளின் தொண்டு உள்ளத்துக்கு தலை வணங்குகிறேன்

 நாட்டின் வறுமையை குறைக்க அறிவியலும் தொழி நுட்பமும் பெரும் பங்காற்றியுள்ளன என்றும் சிறந்த நிர்வாகத்துக்கு அறிவியல் ஆற்றியுள்ள பங்கை அளவிடமுடியாது என்றும் அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்த இந்திய அறிவியல் மாநட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

எனது பேச்சை தொடங்கும் முன் திரு. வசந்த் கவ்ரி காருக்கு எனது அஞ்சலியை செலுத்த விரும்பு கிறேன். அறிவியல் மாநாட்டில் பேசுவதற்கு எனக்குகிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பம் தான் உதவும் என்பதை முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு உணர்ந்து அதற்கேற்ப திட்டங்கள் கொண்டுவந்தார். அதன்படி நாட்டில் கிடைத்த சொற்ப ஆதாரங்களைவைத்து நமது விஞ்ஞானிகள் பல சிறந்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்கினர். புதிய ஆராய்ச்சிகளைத் தொடங்கினர். அவை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து நமக்கு உதவி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ‘மங்கல்யான்’ செயற்கைக் கோளை நமது விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி முதல் முயற்சியிலேயே சாதனைபடைத்தனர். அதேபோல் ஹுத் ஹுத் புயலின்போது செயற்கைக்கோள் மூலம் துல்லியமான தகவல்களை விஞ்ஞானிகள் அளித்து, ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர்.

வர்த்தகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் நாட்டில் ஆராய்ச்சி களையும் பெருக்க வேண்டும். அதற்குள்ள தடைகளை நிச்சயம் போக்குவேன். நமது பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், புதிய கண்டு பிடிப்புகளைக் கொண்டு வரவும் அவை சுதந்திரமாக செயல்படுவது முக்கியம். தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வழிவகை செய்யப்படும். நமது விஞ்ஞானிகளும் பல்கலைக்கழகங் களில் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தைக் கற்றுத்தரவும், அவர்களை வழிநடத்தவும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடு செய்யவேண்டிய தேவை உள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையதள தொடர்பு அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அறிவியல்மீது குழந்தை களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அறிவியல் மீது காதல்வரும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், புதியகண்டு பிடிப்புகளுக்கு நமது நாடு முன்னுரிமை தர வேண்டும்.

ஆராய்ச்சிகளுக்கு நிதிகிடைக்கும் விஷயத்தில் பலதடைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவிக் கின்றனர். அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைப்பது, தேவை யற்ற சட்டதிட்டங்களால் நிதிகிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அந்தத்தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஞ்ஞானிகளுக்கு உறுதி தருகிறேன் . அறிவியலில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்து உலகுக்கு அளிக்க விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனம்செலுத்த வேண்டும். அரசுதரப்பில் உள்ள தடைகள், விதிமுறைகளை பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஆதரவுதர என்னைவிட வேறு யாரும் சிறந்தவர்களாக இருக்க முடியாது.

குழந்தைகளிடத்தில் தொழில்நுட்ப அறிவை வளர்க்கவேண்டும். நமது விஞ்ஞானிகளுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கு இணையதளத்தை குழந்தைகளும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனித வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியும் அறிவியல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை. உலகில் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. அதேபோல் அறிவியல் தொழில்நுட்பத்திலும் 2-வது இடத்தில் சீனா உள்ளது. அதுபோல் நாட்டின் வளர்ச்சியை சிந்திக்கும் போது ஆராய்ச்சிகளும் பெருக வேண்டும்.நாட்டின் வறுமையை குறைக்க அறிவியலும் தொழி நுட்பமும் பெரும் பங்காற்றியுள்ளன.

சிறந்த நிர்வாகத்துக்கு அறிவியல் ஆற்றியுள்ளபங்கை அளவிட முடியாது.விஞ்ஞானிகளின் தொண்டு உள்ளத்துக்கு தலை வணங்குகிறேன். விஞ்ஞானிகள் நாட்டை முன்னெடுத்து சென்றுள்ளனர்.

உலகின் முன்னோடிகள் நாம்தான் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ளோம். எப்போதெல்லாம் உலகம் தனதுகதவுகளை அடைத்ததோ, அப்போதெல்லாம் நமது ஆராய்ச்சியாளர்கள் உறுதியுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துள்ளனர்.

அறிவியல் வளர்ச்சி தான் மனிதனை வளர்ச்சி பெறவைத்தது. வறுமை நோய்களை போக்குவதில் அறிவியல், தொழில் நுட்பத்தின் பங்கு முக்கியமானது. அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவை எல்லைகளை கடந்து உலகை இணைக்க கூடியவை.

இந்தியாவுக்கு சவாலானநேரம் வந்த போதெல்லாம் நமது விஞ்ஞானிகள் சாதித்துகாட்டி உள்ளனர். இந்தியாவுக்கு உதவிகள் செய்ய மற்றநாடுகள் மறுத்த போதெல்லாம், உள்நாட்டிலேயே நமது விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து சாதனை படைத்தனர். அதேநேரத்தில், இந்தியாவின் உதவியை மற்றநாடுகள் கேட்ட போது, தயங்காமல் நமது விஞ்ஞானிகள் செய்தனர். அது தான் நமது நாட்டின் கலாச்சாரம்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...