காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்கவேண்டும்

 காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்கவேண்டும் என்று மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் 1 கோடி, உறுப்பினர்களை பாஜக.,வில் இணைக்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

பாஜக தேசியதலைவர் அமித்ஷா கர்நாடகாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் . கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் :

கர்நாடகாவில் சட்ட-ஒழுங்கு கெட்டு விட்டது, அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் பெருகியுள்ளன. இந்த சூழலில் காங்கிரசை தூக்கி எறிய கர்நாடகமக்கள் முன்வரவேண்டும். நாட்டுமக்களை காங்கிரசிடமிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி மீட்டதைபோல, கர்நடாக மக்களும், காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவாக மாற்ற முன்வரவேண்டும்.

கடந்த ஏழரை மாதகால மோடி அரசு, பல்வேறு நல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது, விலை வாசி குறைந்துள்ளது. கர்நாடக மத நிறுவனங்கள் மற்றும் அறக் கட்டளை சட்டத்தை அறிமுகம்செய்தது, பசுவதை தடுப்பு சட்டத்தை வாபஸ்பெற்றது போன்ற நடவடிக்கைகளின் மூலம், சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி கொண்டுள்ளது.

கர்நாடக அரசின் மக்கள்விரோத போக்கையும், நிர்வாக சீர்கேட்டையும் கண்டித்து வீதிக்கு இறங்கி போராடுமாறு பாஜக நிர்வாகிகளை கேட்டு கொண்டுள்ளேன். தேசியளவில் பாஜக.,வுக்கு 10 கோடி உறுப்பினர்கலை சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் மூன்றுகோடி உறுப்பினர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. கர்நாடகாவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்று நிர்வாகிகளை கேட்டு கொண்டுள்ளேன். ஆன்லைன் மூலமாகவே உறுப்பினர்களாக சேர வசதிசெய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...