பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த, 'மேக் இன் இந்தியா' திட்டம் குறித்த பிரசாரத்துக்கு, சமூக வலை தளங்களில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
வெளிநாட்டு இறக்கு மதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில், 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி, மூன்று மாதங்களுக்கு முன் அறிவித்தார். 'உள்நாட்டு நிறுவனங்களும், வெளிநாடுகளைச்சேர்ந்த நிறுவனங்களும், இந்தியாவிலேயே பொருட்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்' என்பதுதான், இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்ததிட்டம் குறித்த பிரசாரத்துக்காக, 'மேக் இன் இந்தியா' என்ற பெயரில், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பல்வேறு திட்டங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் மூலமாக ஏராளமான பிரசாரங்களை மேற்கொண்டாலும், 'மேக் இன் இந்தியா' பிரசாரத்துக்குதான், அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
'பேஸ்புக்' பக்கத்தில்மட்டும், இந்த திட்டத்துக்கு, 30 லட்சம் பேர் ஆதரவுதெரிவித்து, பிரசாரத்தில் இணைந்து உள்ளனர். ஒவ்வொரு மூன்றுவினாடிக்கும், புதிதாக ஒருவர், பேஸ்புக்கில், இந்ததிட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
https://www.facebook.com/makeinindiaofficial
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.