உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள்கள் என்ன என்று கண்டறிந்து பட்டியலிட்டு அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்கவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று (6-8-2021) காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார்.

உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் அவரது உரை விவரம்:

கொரோனா நோய் பரவலை  தொடர்ந்து புதிதாக உருவான வாய்ப்புக்களை இந்தியா தனக்குசாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய பொருள்கள் புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் அத்துடன் இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும் இதன்மூலம் 400 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் ஏற்றுமதி உயர்வதற்கு நான்குஅம்சங்கள் உதவியாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார் .உள்நாட்டில் உற்பத்தி பலமடங்காக உயர்ந்திருப்பது,. உற்பத்திக்கான செலவு குறைந்திருப்பது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து இருப்பது, இந்தியாவின் ஏற்றுமதி முயற்சிகள், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வெளிநாடுகளில் தேவைகுறித்து மதிப்பிடவேண்டும் அவ்வாறு மதிப்பீடு செய்யும்பொழுது இந்திய பொருள்கள் எவற்றை அந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்க வேண்டும் அந்த பொருட்களின் பட்டியலை தயார்செய்து அவற்றை இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% தற்பொழுது ஏற்றுமதி செய்ய படுகிறது இந்திய பொருளாதாரம் அதன் திறன் உற்பத்தி திறன் ஆகியவற்றின் வலிமையோடு ஒப்பிடும்பொழுது ஏற்றுமதியை இன்னும் பலமடங்கு உயர்த்த இயலும்.

இந்தியா தனித்திறமை அனைத்தையும் பயன்படுத்தி புதியவாய்ப்புகளை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...