வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்த அன்சாரி அடித்த பல்டி: அரசியல் விளையாடியது?
அயோத்தியில் ராமபிரான் அவதரித்த புனிதத்தலம் குறித்த வழக்கில் இருந்து ஹாசிம் அனசாரி விலகிக் கொண்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில்
உள்ளது. அன்சாரி கூறுகிறார்: "அயோத்தியில் தற்போது தற்காலிக கூடத்தில் ராமர் கோயில் உள்ளது. அதற்கு பதிலாக அங்கு பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டவேண்டும் என்பதே எனது விருப்பம். மக்கள் மாளிகையில் வசிக்கும்போது கடவுள் மட்டும் கூடாரத்தில் இருக்கலாமா? அயோத்தியில் ஏற்கனவே ராமர் கோயில் இருந்ததாக மந்திரி அசம்கான் சொன்னார். ஆனால் இந்த வழக்கை நடத்தி ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் முட்டாளாக்கப் பார்க்கிறார்."
இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையல் அன்சாரியை உபி மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாதி பிரமுகர்கள் சந்தித்ததை அடுத்து அன்சாரி நிலையை மாற்றி பேசினார். தன்னுடைய மகன் இக்பால் அன்சாரி வழக்கைத் தொடர்ந்து நடத்துவார் என்று தெரிவித்தார். இதற்கிடையில் காசி நகரில் வசிக்கும் இரண்டு முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் காசியின் எம்.பியும் பிரதமருமான நரேந்திர மோடியுடன் அலுவலகம் சென்று மகஜர் ஒன்றை அளித்துள்ளார்கள்.
முஸ்லிம் மகிளா பவுண்டேஷன் தலைவர் நஜ்ணீன் அன்சாரி, "முஸ்லிம்கள் வளவாழ்வு வாழ விரும்பினால், ஹிந்துக்களின் நன்மதிப்பை பெற விரும்பினால் ராமனின் ஜன்ம ஸ்தானத்தில் கோயில் கட்டும் பணியில் அவர்கள் முன்னணி வகிக்க வேண்டும்; ஏனென்றால் அயோத்தி ராமனுக்கே சொந்தம் என்று உலகத்துக்கே தெரியும்." என்று அந்த மகஜரில் குறிப்பிட்டுள்ளார். பாரதிய அவாம் கட்சி தலைவி நஜ்மா பர்வீன், "ராம பிரானிடம் பக்தி பூண்ட கோடானுகோடி ஹிந்துக்களின் சமய உணர்வுகளுடன் எவரும் விளையாட முடியாது. ராமர் கோயில் கட்டுவதற்கு உறுதுணை புரிவதன் மூலம் முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்துக்கும் முன்னுதாரணம் ஆகிடவேண்டும்" என்றார்.
ராமர் கோயில் கட்டப்பட்டால் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள துவேஷம் குறையும். ஒற்றுமை வலுப்படும் என்று இரு பெண்களுமே கூறுகிறார்கள்.
நன்றி : விஜய பாரதம்
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.