ரயில்வே துறை நிதி சிக்கலில் இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் பொருளாதாரம் தொடர்பாக நடந்த மாநாட்டில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: ரயில்வே துறையில் நிதி போதுமானதாக இல்லை. இந்த துறை நிதி சிக்கலில் உள்ளது. இதை
மேம்படுத்துவதற்கும், புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கும் நிதி தேவை. பயணிகள் போக்குவரத்து தவிர, சரக்கு போக்குவரத்துக்கும் வசதியாக 30 முதல் 40 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதையை விரிவு படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரயில்வே துறை 2.5 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. அதே நேரத்தில், இத்தகைய துறைகளில் முதலீடு செய்வதற்கு போதுமான நிறுவனங்கள் இல்லை. முதலீட்டை அதிகரிக்க பென்ஷன் திட்டங்கள் உதவிகரமாக உள்ளன.
அதுமட்டுமின்றி நக்சல் தாக்குதல் உள்ள பகுதிகளில் ரயில்களில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். இது போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் முதலீடு அதிகரிப்பதோடு வேலை வாய்ப்பும் பெருகும். நாட்டின் பொருளாதாரத்தை தற்போதுள்ள 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரில் இருந்து 20 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கனவு விரைவில் நிறைவேறும். மறு சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து கணக்குகளும் ஒரே இடத்தில் வைத்து கண்காணிப்பதன் மூலம், வீண் செலவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும். அதோடு ஒவ்வொரு ஒரு ரூபாயும் உபயோகமான வழியில் செலவிடுவது உறுதி செய்யப்படும். இதனால் வருவாயும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு இலக்கும் வரிசைப்படி எட்டப்பட்டு, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை அடையலாம். நிர்ணயித்த இலக்கை அடைவதற்கான உத்திகளை மோடி தலைமையிலான அரசு ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு சுரேஷ் பிரபு பேசினார். –
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.