மோடி – ஒபாமா நட்பு வலுப் பெறவும், பயங்கர வாதத்திற்கு எதிரான இருவரின் எண்ணங்கள் நிறைவேறவும் வேண்டி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
நாட்டின், 66வது குடியரசு தினம், நாளை நாடுமுழுவதும் கொண்டாடப் படுகிறது. தலை நகர் டில்லியில் நடைபெறும், குடியரசு தின விழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கிறார். பின், உலகை அச்சுறுத்திவரும் பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சு நடத்த உள்ளார்.
இந்நிலையில், மோடி – ஒபாமா உறவு வலுப் பெறவும், அவர்களின் எண்ணம் நிறைவேறவும் வேண்டி, மோடியின் சொந்ததொகுதியான வாரணாசியில், கங்கை நதிக் கரையின் 'அஸ்ஸி காட்' பகுதியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்தயாகத்தின் பிரசாதம், மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாரணாசி பா.ஜ., செய்தி தொடர்பாளர், சஞ்சய்பரத்வாஜ் கூறியதாவது: பயங்கர வாதத்தை ஒழிக்க பாடுபடும் மோடி – ஒபாமாவின் எண்ணம் நிறைவேற வேண்டி யாகம் நடத்தினோம் என்றார்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.