இந்திய கலாசாரத்தையும், ராணுவ வலிமையையும் பறை சாற்றும் விதமாக தில்லியில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் பாரம்பரிய தலைப் பாகை அணிந்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அணியும் உடைகளானகுர்தா, பைஜாமா, வண்ண கதர்த் தலைப்பாகை, கோட்-சூட் ஆகியவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருந்து வருகிறது.
தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்க ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் சென்றிருந்தபோதும், திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற போதும் பிரதமர் மோடி அணிந்திருந்த உடைகள், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தன.
கடந்த முறை சுதந்திர தின விழாவின்போது அணிந்ததுபோல, குடியரசு தின விழாவிலும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அணியப்படும் பல வண்ண நிறமுடைய தலைப்பாகையை (டர்பன்) பிரதமர் மோடி அணிந்திருந்தார்.
விழா நடைபெற்ற ராஜபாதை பகுதிக்கு "பீஸ்ட்' காரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைத்து வரப்பட்டார். அதிபருடன், அவரது மனைவி மிச்செலும் வந்தார்.
குர்தா அணிய ஒபாமா விருப்பம்: முன்னதாக, தில்லி விமான நிலையத்தில் அதிபர் ஒபாமாவை வரவேற்க சென்றிருந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையான குர்தா பைஜாமா அணிந்திருந்திருந்தார். அன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் பங்கேற்ற ஒபாமா, பிரதமர் மோடி அணியும் குர்தா பைஜாமா போன்று தானும் அணிய விரும்புவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.