ஆம் ஆத்மி கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது

 போலி நிறுவனங்களிட மிருந்து ரூ.2 கோடி நிதிபெற்றிருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்துசென்ற ஏ.ஏ.பி. தன்னார்வ நடவடிக்கைக் குழு (ஆவாம்) என்ற அமைப்பு, ஆம் ஆத்மி கட்சி கடந்த ஆண்டு நான்குபோலியான நிறுவனங்கள் மூலம் ரூ.2 கோடி நிதி பெற்றதாக புகார் கூறியிருந்தது.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இதுகுறித்து கூறும்போது, ''நான்கு போலியான நிறுவனங்களின் பெயரில் தலா ரூ.50 லட்சம் காசோலைகளின் மூலம் ஆம் ஆத்மி ரூ.2 கோடி நிதி பெற்றதன் மூலம் அந்தக்கட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

இது அரசியல் அமைப்பை பயன் படுத்தி கருப்பு பணத்தை கை மாற்றிவிடும் நடவடிக்கையாகும். ஹவாலா பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு இந்தப்போலி நிறுவனங்கள் ஒரு வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது போன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ஒவ்வொருவரும், பிரச்னையை திசைதிருப்புவதற்காக மற்ற அரசியல் கட்சிகள் மீது புகார் கூறுவர். இதைப்போலவே, மூன்று முக்கிய கட்சிகளின் நிதி ஆதாரம் குறித்து விசாரணை கோருவதன் மூலம் பிரச்னையை திசை திருப்பும் தந்திரத்தை ஆம் ஆத்மி கையாளுகிறது.

இந்த விவகாரம் சட்ட அமைப்புகளின் கவனத்திற்குச் செல்லும் போது, அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்வார்கள் என்று உறுதியளிக்கிறேன். மேலும், போலி நிறுவனங்களின் பின்னணியில் இருப்பது யார்? அவர்களுடைய நிதி ஆதாரம் என்ன? என்பதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படை தினத்தை முன்னிட்டு வீர ...

கடற்படை தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின்  துணிச்சல்மிக்க வீரர்களுக்கு ...

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மண் ...

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மண்சந்தா மறைவிற்கு மோடி இரங்கல் முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும்  திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால்,  அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...