உத்தரப்பிரதேச மாநிலம் காசி யில் உள்ள கங்கைக் கரைகளில் பிஎஸ்என்எல் சார்பில், இலவச வைஃபை சேவை அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தி லுள்ள காசி, வாரணாசி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தெய்வீக நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் வாரணாசியில் கங்கை ஆற்றின் கரைகளில் மிகவும் பழமையான படித்துறைகள் உள்ளன. இங்குவரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலவச வைஃபை சேவை தொடங்கப்பட உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், தசாஸ்சுவமேத கரை மற்றும் சிஸ்லா கரைகளில் முதல் கட்டமாக இச்சேவை தொடங்கப் பட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாரணாசி உலகின் சிறப்பான தெய்வீக சுற்றுலா தலமாக்கப்படும் என அவர் வாக்குறுதியளித்தது நினைவுகூரத்தக்கது
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.