ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல பல கருத்து பரிமாற்றங்கள், அரசியல் சூழல் பற்றிய ஆராய்ச்சி, வருங்காலத் தேர்தலுக்கான அளவு கோலா? பா.ஜ.க. உண்மையான மாற்று சக்திதானா? இப்படி பல பல கேள்விகள்… இதில்
எனக்குள்ள வியப்பு விமர்சனம் செய்பவர்கள் பலர் களத்தில் இறங்காமல் ஊழலுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பலமாக பதிவு செய்யக்கூட முடியாதவர்கள் முடிவைப் பற்றி பேசுகிறார்கள்.
பா.ஜ.க.வைப் பொறுத்த மட்டில் எதிர்ப்பைத் தெரிவிக்க பலமாக களம் இறங்கினோம். வெற்றியைப் பெறுவதற்கும் பணம் செலவிடப்பட்டது. டெப்பாசிட்டைத் தக்க வைக்கவும் பணம் செலவிடப்பட்டது. இந்தத் தேர்தல் முடிவுகளை வருங்கால அரசியலுக்கோ, வருங்காலத் தேர்தலுக்கோ, ஓர் அளவீடாகவும், குறியீடாகவும் எடுத்துக்கொள்ள முடியாது! வெற்றி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் நம்பத்தகுந்ததல்ல. தோல்வியடைந்தவர்கள் எடுத்த வாக்குகள் உண்மையான குறியீடுகள் கிடையாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை விட வளர்மதி எம்.எல்.ஏ., அதிகம் வாக்குகள் பெற்றிருக்கிறார். அப்படியென்றால் முன்னாள் முதல்வரை விட வளர்மதி அதிகம் பலமானவரா? இல்லை என்றால் மக்கள் ஆதரவை, அவரைவிட இவர் அதிகம் பெற்றிருக்கிறாரா? எனவே இந்த வாக்குகள் உண்மையான குறியீடு அல்ல.
எனவே பா.ஜ.க. பலவீனமடைந்து விட்டது என்ற விவாதத்தை முற்றிலுமாக மறுக்கிறேன். இன்று திராவிடக் கட்சிகளுடன், களத்தில் நிற்கக் கூடிய கட்சி நாங்கள் என்பதை உள்ளாட்சி இடைத்தேர்தலுக்குப் பின் மறுபடியும் நிரூபித்திருக்கிறோம். வருங்காலத்திலும் எங்கள் பலத்தை நிரூபிப்போம்.
தமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியலையும், ஆரோக்கியமான அரசியலையும், பா.ஜ.க. எடுத்துச் செல்லும். தமிழகம் முழுவதும் எங்களது உறுப்பினர் சேர்க்கை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பா.ஜ.க.வின் சக்தியை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.
நன்றி ; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர்
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.