கர்நாடகாவை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேகதாது அணையைக்கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் தஞ்சையில் அண்ணாமலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேகேதாட்டு அணையை கட்டியேதீருவோம் என்று அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து உண்ணாவிரதம் நடைபெற்றது.
நான் தஞ்சையில் உண்ணாவிரதம் இருப்பது கர்நாடக அரசு, கர்நாடக முதல்வரை எதிர்த்து அல்ல. அங்குள்ள காங்., தலைவர் சித்தராமையா, சிவகுமார்போன்றோரும், ‘மேகதாது அணைகட்டுவதை தமிழகத்துக்கு ஏன் கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும்’ என கேட்பதை எதிர்த்துதான் போராட உள்ளேன்.
அம்மாநிலத்தில் விவசாயிகளை காக்க, அங்குள்ள பா.ஜ., முயல்கிறது. தமிழக விவசாயிகளுக்காக நாங்கள் போராடுகிறோம். காவிரிஆணையம் அனுமதி பெறாமல், அணையை கட்ட முடியாது என்பதை உணர வேண்டும். இதை அரசியலாக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை. இந்நிலையில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் சென்றது, கொரோனா விதிகளை மீறி கூடியது உள்ளிட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |