உலகை வழிநடத்துவதற்கு தேவையான சக்தி இந்தியாவிடம் உள்ளது

 இந்திய மக்களின் மூதாதையர் ஒருவரே; ஆகையால் தங்களுக்கு இடையேயான சாதி, மத, மொழி வேற்றுமைகளை புறந்தள்ளி விட்டு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஒன்றுசேர்ந்து போராடவேண்டும்'' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேட்டு கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், பரத் பூரில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபுத்திர மன்னர் ராணா சங்காவின் வரலாறு பொறிக்கப்பட்ட நினைவு சின்னத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:

கான்வாவில், 1527ம் ஆண்டு பாபருக்கும் (முகலாய வம்சத்தின் முதல்மன்னர்), ராணா சங்காவுக்கும் இடையே நடைபெற்ற போரானது, உலகில் நடைபெற்ற போர்களில் மிகவும் முக்கியமானதாகும். இந்த போரானது, இந்தியர்கள் பல்வேறு கலாசாரங்களை கொண்டவர் களாகவும், பல்வேறு மதங்களை பின்பற்றினாலும், பல கடவுள்களை வழி பட்டாலும், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துரைத்தது.

கான்வா போரின் போது, பாபர் தனது படையில் சேரும்படி விடுத்த அழைப்பை, ராணா சங்காவின் வீரர் ஹசன்கான் நிராகரித்து விட்டார். அப்போது ஹசன்கான், "தனது மொழி, மதம், சாதி ஆகியவை பாபரை போன்று இருக்கலாம்; ஆனால் முதலில், தாம் ஓர் இந்தியர். பாரதத்தாயின் புதல்வர்' என்று பாபரிடம் தெரிவித்து விட்டார்.

நாம் அனைவரும், பாரததாயின் புதல்வர்கள் ஆவோம். நமது மூதாதையர் ஒருவரே. உலகை வழிநடத்துவதற்கு தேவையான சக்தி இந்தியாவிடம் உள்ளது. உலகில், சக்தி அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள சூரியன் போன்றது நமது நாடு.

சிறிய விஷயங்களுக்காக ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதை விட்டுவிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையையும், தேச ஒருமைப்பாட்டையும் பேண வேண்டும். ஒற்றுமையாக இருந்து, உலகுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். நினைவுக்கு எட்டாத பழங்காலத்தில் இருந்து நாம் அனைவரும் கலாசாரம், சாதி, மத வேற்றுமைகளை புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் என்றார் பாகவத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...