பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது , இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. பொதுமக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளுடனும் ஆவலுடனும் இந்த கூட்டத்தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே, இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பொன்னான நேரமும் வீணகக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டியது அவசியம். இது அவர்களின் பொறுப்பும் ஆகும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை நம்மால் நிறைவேற்ற இயலும்.

சில விஷயங்களில் மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதை அறிவேன். எனவே, எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்க உரிய முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்படும். என்று மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...