பீகார் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கபட்ட நிதிஷ் குமார் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளார். பீகார் மாநில முதல்வராக 4வது தடவையாக நிதிஷ் குமார் பதவி ஏற்றார். அவருடன் 22 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.புதிய அமைச்சரவை விரைவில் பட்ஜெட் தயாரிப்புக்கான ஏற்பாடுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலையதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியிருந்தார். இதற்கு நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நிதிஷ் குமாரிடம் தற்போது மாற்றம் ஏர்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முன்பு மோடி என்ற பெயரை கேட்டாலே நிதிஷ் குமாருக்கு பிடிக்காது. மோடியை பிரதமர் பதவிக்கு பாஜக அறிவித்த போது அவர், அந்தகூட்டணியில் இருந்து வெளியேறி எதிர்ப்பு தெரிவித்தார்.
தற்போது அவரிடம் மோடி மீதான எதிர்ப்புமனநிலை நீங்கிவிட்டதாக தெரிகிறது. பொதுவாக மாநில முதல்வர் பதவி ஏற்பவர்கல், பிரதமரை சந்தித்து பேசுவது வழக்கம் அந்த மருபுபடி நிதிஷ் குமார் விரைவில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துபேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது பீகார் மாநிலத்துக்கு, சிறப்புநிதி ஒதுக்கீடாக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்ய நிதிஷ் குமார் கோரிக்கை விடுப்பார். மோடி அதை ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.