நாட்டின் திட்டமிடும் முறையை எமது அரசு பரவலாக்க முடிவுசெய்துள்ளது

 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு ஏற்று கொண்டுள்ளது, மாநிலங்களின் வளங்களுக்கான அதிகாரப்பகிர்வு அதிகரிப்பு, எங்களது அரசு மாநிலங்களுக்கு அதிக நிதி அளிக்கவும், மாநிலங்கள் தங்களின் வளர்ச்சிக்கான திட்டத்தை வகுக்க தேவையான சுதந்திரத்தை அளிக்கவும் முடிவுசெய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துமாநில முதல்வர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் அவர் கூறியுள்ளதாவது ,

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு நிதிநெருக்கடியை அளிக்கும் என்றாலும் நாங்கள் அதனை முழு மனதோடு ஒப்புக் கொண்டுள்ளோம். வளங்களுக்கான மாநிலங்களின் அதிகாரபகிர்வை 10 சதவிதம் அதிகரிக்குமாறு 14வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆணையத்தின் பரிந்துரையை விட சற்று அதிகம். மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரபகிர்வு 2014-15ஐ-விட 2015-16ல் அதிகமாக இருக்கும். இதனால் மத்திய அரசுக்கு குறைவான நிதி தான் கிடைக்கும். இருப்பினும் மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களை நீங்கள் வடிவமைக்கவும் செயல்படுத்தவும் இது உதவும் என்பதால் இந்த 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

14வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். "அனைவருக்கும் பொருந்தும் ஒருஅளவு" என்ற அனுகு முறையை மாநிலங்களிடம் தினிப்பதைவிட்டு நாம் விலகி உள்ளோம். மாநிலங்கள் இந்தகொள்கைக்கு எதிராக பல ஆண்டுகள் குரல் எழுப்பி வந்துள்ளன. இந்த நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நாட்டின் திட்டமிடும் முறையை எமது அரசு பரவலாக்க முடிவுசெய்துள்ளது. இதன் படி மாநிலங்கள் தேவையான அளவு சுதந்திரமாக திட்டமிடவும் வளர்ச்சி யடையவும் அதிகளவு நிதியைபெறுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 10% இந்தவகையில் மாநிலங்கள் செலவிட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் முன்னுரிமை திட்டங்களையும் வளங்களையும் இதற்காக செயல்படுத்தற்கு திட்டமிட முன்வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். திட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் முறையான மதிப்பீடுசெய்து நாம் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சியில் நானும் உங்களுடன் இனணந்து பணியாற்றுவேன். பணிகளை தரமானதாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்கான வரையறைகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும்.

இதை நோக்கியபாதையில் நாம் இணைந்து செயல்படுவோம். இதுகுறித்த ஆலோசனைகளை பெறுவதற்கு எந்த நேரத்திலும் நான் தயாராக உள்ளேன் " என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...