கிரிகெட் வினாயகர்” – இந்துக்களின் மனம் விசாலமானது

 கிரிகெட் வினயகர் – பாடிகாட் முனீஸ்வரன் – வைசூரி காளியம்மன் – பிளேக் மாரியம்மன் – மதுரை துலுக்கநாச்சியார்- "சபரிமலை வாவர்" – இவையெல்லாம் இந்துக்கள் வணங்கும் சாமிகளின் பெயர்…..

இதில் மதுரை துலுக்க நாச்சியார் – சபரிமலை வாவர் – இரண்டும், இதை போல பல சாமிகள் முகலாய படையெடுப்புக்குப்பின் "போலி மத சார்பற்ற வாதிகளால்" திணிக்கப்பட்ட வரலாற்று திரிபுகள் என்பது வேறுவிஷயம்.

சரி….. சப்ஜெட்டுக்கு வருகிறேன். சென்னை அண்ணாநகர் அடுக்கு மாடி குடியிருப்பு அருகெ உள்ள பாளையத்தம்மன் கோவிலுக்குள் "கிரிக்கெட் வினாயகர்" சிலைகளை கிரிகெட் ஆர்வலர் ரமகிருஷ்ணன் என்பவர் கடந்த வினயகர் சதுர்த்தி அன்று நிறுவினார்.

அதற்கு முன்பே 2001-ம் ஆண்டு இந்திய ஆஸ்திரிலிய கிரிகெட் போட்டியில் இந்தியா வென்றால் வினாயகர் கோயில் கட்டி, அதற்கு கிரிகெட் வினாயகர் என்றே பெயரிடுவேன் என தனது வேண்டுகோளை நிறைவேற்றிய வினாயகருக்காக கோவில் கட்டினார்.

தற்போது கட்டப்பட்டுள்ள "கிரிக்கெட் வினாயகர் கோவிலில் – 6 வினாயகர் சிலைகள் நடுநாயகமாக இருக்கும், வினாயகரின் 11 தலைகள் 11 வீரர்களை குறிக்கும். ஒரு கையில் பேட், இன்னொரு கையில் பந்து, கால்களில் பாதுகாப்பு கவசம் என வினாயகர் காட்சி தருகிறார்.

இப்படி எல்லாம் தாங்கள் வணங்கும் தெய்வத்தை (தெய்வங்களை அல்ல…. மற்றவர்களுக்கு "ஏக இறைவன்" மட்டுமே). மற்ற மதத்தினரால் அலங்கரிக்க முடியுமா? பெயரிட முடியுமா? கோயில் கட்ட முடியுமா?

அப்படி செய்தால் செய்பவருக்கு பரிசு "சிரச்சேதம்" தலையை கொய்வது தான் பரிசு (அதனால் தான் ஒரு இயக்கத்துக்கு பெயரே அல் "கொய்தா" என வைத்திருக்கிறார்களோ!).

ஆமாம்! "ஜாமியத் உலே ஹிந்த்" என்கிற இஸ்லாமிய அமைப்பின் மதகுருவான "முப்து முகம்மது இலியாஸ்" என்பவர் "இஸ்லாமின் முதல் இறை தூதர் கடவுள் "சிவனே"–

இந்தியாவை இந்துநாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை…. இந்திய முஸ்லீம்கள் எல்லாம் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள்" என போசியுள்ளார்.

இதற்கு பரிசு என்ன தெரியுமா முகம்மது இலியாவின் தலையை கொய்து வருபவனுக்கு 1,00,786/- ரூபாய் பரிசு என சித்திக் தூரி என்பவர் அறிவித்துள்ளார். இவர் பாகிஸ்தானோ அல்லது சவுதி அரேபியாவில் உள்ளவர் அல்ல. இந்தியாவில் உ.பி மாநிலம் பரெலியில் உள்ளார்.

இந்த அறிவிப்பு இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார். உ.பி அரசு முழுக்க முழுக்க முஸ்லீம் ஆதரவு வாக்கு வங்கியை நம்பி உள்ளதால் தன்னை கைது செய்யாது என்றும் தைரியம் தான் சித்திக்தூரிக்கு.

சரி! மீண்டும் விஷயத்துக்கு வருவோம்! இப்படி இந்து மதம், நாத்திகனையும், ஆத்திகனையும், கல்லை, மண்ணை, மரத்தை மஞ்சளை கும்பிடுகிறவனையும், உருவமே இல்லாமல் வழிபடுகிறவனையும் கொண்டிருக்கும் "விசாலமான மனம் கொண்ட மதம்" அதனால்தான் இடமளித்து வரவேற்று, வாழவைத்து, மதம்மாற்றம் செய்வது தவறல்ல…. அது எங்கள் அடிப்படை உரிமை… ஆதாரம்..ஆர்டிகிள்-25 என முஸ்லீம்-கிறிஸ்தவர்களை சொல்லவைத்து ஆர்பரிக்கவைத்து அழகுபார்க்கிறது!

சரி! இந்த கிரிகெட் வினாயகரின் சிறப்பம்சம் என்ன? 108 தமிழ்மந்திரங்கள் "ஓம் பவுண்டரி அடிப்போனே போற்றி! ஓம் சிக்சர் அடிப்போனே போற்றி" உள்ளிட்டவைகள், மற்றும் 108 இந்தி மந்திரங்கள் (தமிழ்நாட்டில் சமஸ்கிருத எதிர்ப்பு உள்ளது என்ற பயத்தால்) ஓம் விக்கெட் கீப்பராய நமஹ… ஓம் ஹேட்ரிக் லேனேவாலோ நமஹ.. ஓம் ஆல்ரவுண்டராய நமஹ" என்பவனவும் அடங்கும்.

இந்தியா பங்கேற்கும் ஒவ்வொரு உலக மேட்சுக்கு முன்பும் "கிரிகெட் ஹோமம்"  நடத்துகிறார்கள். இதன் பலனை வினாயகர் தராமல் இல்லை. முதலில் பாகிஸ்தானுடன் வெற்றி! பிறகு தெனாப்பிரிக்காவுடன் வெற்றி! இறுதியில் உலக கோப்பையும் இந்தியாவுக்கு வினாயகர் பெற்றுத்தருவாராம். நாமும் சொல்வோம்! வெல்வோம்!

ஓம் கிரிகெட் வினாயகனே போற்றி!

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...