நேற்று காலை எங்கள் பகுதி சர்ச் வழியாக நடை பயிற்சி செய்து கொண்டிருந்தேன். காலை பிராத்தனையிலிருந்து வெளியே வந்த பலர் காலில் செருப்பு இன்றி கழுத்தில் காவித்துண்டை சுற்றி இருந்தனர். கூர்ந்து பார்த்த போது நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம், பொட்டு மட்டும் "மிஸ்ஸிங்".. விசாரித்ததில் அவர்கள் சர்ச்சில் இம்மாதம் ………… திருவிழாவாம் அதனால் "விரதம்" இருக்கிறார்களாம்.
மதுரை தெற்கு வெளிவீதி செயிண்ட் மேரீஸ் சர்ச்சில் "ஜீஸஸை" 50 ஆண்டுகளுக்கு மேலாக "சப்பரம்" என்கிற தேரில் வீதி உலா இழுத்து வருகின்றனர். கோவையிலும் பல சர்ச்சுகளில் இம்மாதிரி "ஏசு வீதி உலா" நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கேரளாவில் பல சர்ச்சுகளில் "கொடிமரம்" குறிப்பாக இந்து கோவில் கொடிமரம் போல வைக்கப்பட்டுள்ளது. பல பாதரியார்களும், கன்னியா ஸ்தீரிகளும், காவியில் அங்கி அணிகின்ற பழக்கம் உள்ளது.
டிவியில் வரும் மிகப்பிரபலமான கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் தாடியுடன் காவி அங்கி அணிந்து கிறிஸ்தவ மதப்புரச்சாரம் செய்வது, ஏதோ "இந்து சாமியாரோ" என ச்ந்தேகிக்கும் வகையில் பார்ப்பதற்கு இருக்கும்!
தமிழ்நாட்டில் மிகப்பிரபலமான வேளாங்கன்னி மேரிமாதாவிற்கு, "பாதயாத்திரை" செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அடங்கும். இதில் மிகப்பெரிய அளவில் இந்துக்களின் எண்ணிக்கையும் இருக்கிறது.
இந்தியாவில் முதன்முதலாக குறிப்பாக தமிழகத்தில் கிறிஸ்தவ பிரச்சாரத்திற்காகவும் மத மாற்றத்திற்காகவும் வந்த "யோசேப்பு கான்ஸ்டைண்ட் பெஷி" என்கின்ற வீரமாமுனிவர், நம் துறவிகள் போல, தாடி, காவி அணிந்திருந்தார் என்பது சரித்திரம்…
தற்போது கூட, மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை சிறப்பாக "உபன்யாசம்" செய்யும் ஒருவரின் பெயர் "யோசப் அய்யராம்"…. இதே மாதிரி பெயர்களில் பிரான்ஸின் நடராசன், கிரிஸ்டோபர் அண்ணாமலை என்ற இந்து கிறிஸ்தவ பெயர்களுடன் இருக்கும் முறை கிறிஸ்த்தவர்களிடம் பரவி வருகிறது.
பொட்டு வைத்து கொள்ளவும், தாலி, மெட்டி அணிந்து மஞ்சள் பூசும் பழக்கம் கிறிஸ்தவ கத்தோலிக்கர்களிடம் இருக்கிறது.
பல சர்ச்சுகளில், பூஜைகளில் தமிழில் "போற்றி" போன்ற நாமாவளிகளும், கந்தசஷ்டி கவசம், சுப்ரபாதம் போன்ற மெட்டுக்களில் "ஏசு தோத்திரம்" சொல்லப்படுகிறது!
இவையெல்லாம் இந்நாட்டின் பண்பாடு இதுதான் இந்து கலாச்சாரம் அல்லது "இந்துத்வா….."
இப்படி பெயரிலேயும், வழிபாட்டிலேயும், "இந்து முறைகள்" கடைபிடிக்கும் கிறிஸ்தவர்களை" நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?" என்று சிலர் கேட்டது என் காதில் விழுகிறது!.
வீரமாமுனிவர் என்கிற கிறிஸ்தவ மத போதகர், தான் அறிந்த தமிழை, அவருடைய மொழி பெயர்ப்பைத்தான் இன்று கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் பயன்படுத்துகிறது… அதனால் "பரிசுத்த ஆவி" "நல்ல மேய்ப்பன்" – "புனித இருதயம்" போன்ற நேரடி மொழிபெயர்ப்புகள் கிறிஸ்தவத்தில் பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறது…..
சரி சப்ஜெட்டுக்கு வருவோம்! வாசலில் சாணி தெளித்து கோலமிடுவது, பசுவை தெய்வமாக போற்றுவது, நதிகளையும், மலைகளையும் புனிதமாக வணங்குவது, போன்றவை இந்த மண்ணின் பண்பாடு அதுதான் "இந்துத்வா…." இதை இம்மண்ணில் பிறந்தவர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்வதை வரவேற்கிறோம்!
ஆனால், காவியின் புனிதத்தையும், பெயரின் மாண்பையும், வழிபாட்டு முறையின் நம்பிக்கைகளையும் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படுமானால், இவை மதமாற்றம் செய்வதற்கான ஒரு "யுக்தியானால்" அப்போதுதான் பிரச்சனை எழுகிறது. போராட்டங்கள் வெடிக்கிறது.. சகஜ நிலை கெடுகிறது…..
இப்போது கிறிஸ்தவம் கடைபிடிக்கும் "காவியும்" "தேரும்" "போற்றியும்"… அப்பாவி இந்துக்களை மதம் மாற்றுவதற்கான ஒரு "அழைப்பு"… அவர்களுக்கு"விரிக்கும் வலை" என்பது கண்கூடாக தெரிகிறது….
கிறிஸ்தவத்தின் "காவி"…. ஆவி பிடிக்கும் முயற்சி எனவே… 'தாவி' விட வேண்டாம் என்பதற்கே இந்த "எச்சரிக்கை"
நன்றி ; எஸ்.ஆர். சேகர்
பாஜக மாநிலப் பொருளாளர்
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.