நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக் சபாவில் நிறைவேறியது

 நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளு மன்றத்தின் லோக் சபாவில் நேற்று நிறைவேறியது. இம்மசோதா நிறைவேற அ.தி.மு.க. ஆதரவளித்தது. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்புதெரிவித்து வெளிநடப்பு செய்தன.

பாரதிய ஜனதா கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அவசர சட்டம்கொண்டு வந்து அமல்படுத்தியது. இந்த சட்டத்துக்கு மாற்றாக, நடப்புபட்ஜெட் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான மசோதா, லோக் சபாவில் 'நியாயமான இழப்பீடுபெறும் உரிமை, நிலம் கையகப்படுத்துவதில் வெளிப் படையான தன்மை, மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் (திருத்தம்) மசோதா-2015' என்ற பெயரில் தாக்கல் செய்யப் பட்டது. இம்மசோதா, 'விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது' என கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

அதைத் தொடர்ந்து மசோதாவில் குறைகள் இருப்பதாக கருதினால், திருத்தங்கள் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இம்மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக மூத்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, வீரேந்தர்சிங் ஆகியோர் பா.ஜனதாவின் கூட்டணி கட்சி தலைவர்களிடையே பேசினர். நிலம் கையகப் படுத்தும் மசோதாபற்றியும், அதில் கூட்டணி கட்சிகளின் கவலையை புரிந்துகொண்டு மசோதாவில் கொண்டு வரவுள்ள திருத்தங்கள் குறித்தும் எடுத்துக்கூறி, மசோதாவுக்கு ஒருமித்த ஆதரவைபெற நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து லோக்சபாவில் மசோதா மீது 2-வது நாளாக விவாதம் நடந்தது. எம்பி.க்கள் கார சாரமாக விவாதித்தனர். நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் சம்மதம் பெறுவதை கட்டாயம் ஆக்கவேண்டும் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோ மணி அகாலிதளம் கேட்டுக்கொண்டது.

ஏழை, எளியோர், விவசாயிகளின் உரிமைகள் நசுக்கப் படாதவாறு, கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும் என முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடா வலியுறுத்தினார்.

2 நாட்களாக நடந்து வந்த விவாதத்தை தொடர்ந்து மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வீரேந்தர் சிங் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விளக்கினார். எதிர்க் கட்சிகள் மற்றும் சில கூட்டணி கட்சிகளை சமாதானப் படுத்தும் வகையில் மசோதாவில் அரசு தரப்பில் 9 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 2 உட்பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. எதிர்க் கட்சி எம்.பி.க்கள் 52 திருத்தங்களை கொண்டுவந்தனர்.

அவற்றின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நிலம் கையகப்படுத்தப்படும் போது நிலம் வழங்கியவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற விதியை சேர்க்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது . இந்த வாக்கெடுப்பில் அரசுதரப்பில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் நிறைவேறின.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டுவந்த திருத்தங்கள் முறியடிக்கப்பட்டன. இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது. மசோதாவை பாஜக மற்றும் சிவசேனா தவிர்த்த பிறகூட்டணி கட்சிகளோடு எதிர்க்கட்சியான அதிமுக.வும் ஆதரித்தது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை வெளி நடப்பு செய்தன. லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து ராஜ்ய சபாவிலும் நிறைவேற வேண்டும். ஆனால் பாஜக கூட்டணிக்கு அங்கு போதுமான பலம் இல்லை என்பதால் மசோதா நிறை வேறுவதில் சிக்கல் உள்ளது. அங்கு மசோதா தோற்கடிக்கப்படுகிற பட்சத்தில், நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தை கூட்டி மசோதாவை நிறைவேற்றி விட முடியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...