மோரீஷஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்

 மோரீஷஸ் நாடாளுமன்றக் கூட்டத்தில் மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மோரீஷஸ் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் பலவளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவின் உதவியுடன் மோரீஷஸில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணினி தொழில்நுட்ப நகரம் அமைக்கப்பட்டது. தற்போது அதே போல மேலும் ஒரு நகரத்தை அமைக்க இந்தியா முன்வந்துள்ளது.

மோரீஷஸின் பெட்ரோலியத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கான ஒத்துழைப்பை இந்தியா வழங்கி வருகிறது. இங்கு, பெட்ரோலியசேமிப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் புதிய திட்டமொன்றை அமைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் நடவடிக்கைகளில் மோரீஷஸூடன் இந்தியாவும் இணைந்து செயல்பட விரும்புகிறது. ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக மோரீஷஸ் வாக்களித்தது பாராட்டத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அன்னிய நேரடி முதலீடு என்றபெயரில் மோரீஷஸ் வங்கிகள் வழியாக இந்தியாவில் கருப்புப்பணத்தை முதலீடு செய்வதாக பெரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுகிறது. இத்தகைய முறைகேடுகளைத் தவிர்க்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. அதே வேளையில், இந்த நடவடிக்கை, மோரீஷஸ் நாட்டின் நிதித்துறையை எந்த வகையிலும் பாதிக்காது என்பதற்கு இந்தியா உறுதியளிக்கிறது என்று மோடி தெரிவித்தார்.

கோயிலில் வழிபாடு: முன்னதாக, மோரீஷஸ் நாட்டின் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான கங்கா தால்கோவுக்குச் சென்று மோடி வழிபட்டார். கடல்மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் உள்ள அந்த மலைக் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை சென்ற மோடி, சிறப்பு பூஜை, ஆராதனைகளில் பங்கேற்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.