நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து திமுக. போராட்டம் நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனை, சென்னை கமலாலயத்தில் நேற்று மாலை இங்கிலாந்து நாட்டு துணைதூதரக அரசியல்துறை அதிகாரிகள் சோப்பர், கூக், பெர்னாண்டஸ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். பின்னர், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று நீதிபதிகள்கூட சுதந்திரமாக பயணம்செய்ய முடியாத நிலை உள்ளது. நேர்மையான அதிகாரிகளும் பணிசெய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. தென் மாவட்டங்களில் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு சாதிகலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன் கூட்டியே தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவை பாஜக. நிறைவேற்றிய நிலையில், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் நேற்று திமுக. போராட்டமும் நடத்தியுள்ளது. திமுக. போராட்டம் நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது, மத்திய ஆட்சியில் திமுக. அங்கம்வகித்தது. அன்று வாய் மூடி இருந்து விட்டு, இன்று சட்ட மசோதாவை நிறைவேற்றும்போது விமர்சனம் செய்கிறார்கள். 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பை அதிகம் ஏற்படுத்தவே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளர்ச்சியடையும் கட்சியாக பாஜக. உள்ளது. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணைந்துவருகிறார்கள். தமிழகத்தில் தேசியம் திரும்பிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை (இன்று) அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக. கலந்துகொள்ளும்.
தமிழக பட்ஜெட் விரைவில் வெளியிட இருக்கிறது. டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் பட்ஜெட் இருக்கவேண்டும். தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.