தாம்பரத்தை தாண்டி தாமரையை தெரியாது குஷ்பூ பேசியிருப்பதன் மூலம் அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது. இவ்வளவு கிட்டப் பார்வை உள்ளவர் என்பது இப்போது தான் தெரிகிறது.
தாம்பரத்தை தாண்டியும் தாமரை வளர்ந்து இருக்கிறதா? எல்லைகளை கடந்தும்வளர்ந்து வருகிறதா? என்ற அரசியல் நிலவரங்களை அறிந்துக் கொண்டு பேசுவது தான் அவர் பெற்றுள்ள பதவிக்கு மரியாதை.கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் உள்ளது.
மேட்டுப்பாளையம் எங்கள்வசம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை… என்று வட இந்தியர்கள் பெருமையுடன் சொல்லுமளவுக்கு எல்லா இடங்களிலும் கால்பதித்து இருக்கிறோம்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் திமுகவுக்கு இணையான வாக்குகளை பெற்றுள்ளோம். திமுக, அ.திமுகவுக்கு மாற்றாக பிஜேபி வளர்ந்து இருப்பதை, வளர்ந்து வருவதை மக்கள் கண் கூடாக பார்க்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி பேசியிருப்பர் என்று கருதுகிறேன்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திராணி இல்லை. போட்டிபோடாமல் பயந்து ஓடியவர்கள் அடுத்தவர்களை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை.ஸ்ரீரங்கத்தில் நடந்தவிசயம் நாடறிந்தது. நாங்கள் அந்ததொகுதி நிர்வாகிகளை மட்டுமே வைத்து தேர்தலைசந்தித்து ஊழலுக்கு எதிராக 5 ஆயிரம் வாக்குகளை திரட்டியதை பெருமையாக கருதுகிறோம்.
இவை எதுவுமே தெரியாமல் நன்றி உணர்ச்சியை காட்டுவதற்கு வாய்க்குவந்த வார்த்தை யெல்லாம் பேசக்கூடாது. யாரோ எழுதி கொடுத்த வசனத்தை சினிமாவில் பேசலாம். இது அரசியல். இங்கும் எழுதி கொடுத்த வசனத்தைபேசினால் எடுபடாது. மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.
எங்களை பற்றி விமர்சிக்கும் குஷ்புவால் திமுக.,வை விமர்சிக்க முடியாது. காரணம் இன்னும் பாசம் இழையோடுகிறது. பிஜேபி விமர்சிப்பதற்கு முன்பு உங்கள்பலம் என்ன? எத்தனை லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாவட்ட தலைவர்கள் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள்? வாசன் போய்விட்டார். சிதம்பரம் இருப்பாரா? போவாரா? என்று தெரியவில்லை. இந்தகோஷ்டி அரசியலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அதை சரிப்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். ஒரு இடைத் தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா? இல்லை பொதுத் தேர்தலில்தான் தைரியமாக வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்க முடியுமா? என்ற காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை எல்லாம் கவனியுங்கள்.சினிமா பிரபலமாக இருப்பதால் எதை வேண்டு மானாலும் எப்படியும் பேசலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.
நன்றி ; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர்
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.