இலங்கை தமிழர்கள் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்பட பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் உதவியாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வெளிநாடுகளுடனான இந்திய உறவை மேம்படுத்து வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்க்கொண்டுள்ளார். இதன் விளைவாக இலங்கை போன்ற அண்டை நாடுகள் தவிர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான இந்திய உறவு மேம்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர் ராஜன் பேசியதாவது:
அண்மையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் யாழ்ப் பாணத்துக்குச் சென்றது உலகத் தமிழர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
போரால் பாதிக்கபட்டு நம்பிக்கை இழந்திருந்த இலங்கை தமிழர்களிடையே புதிய நம்பிக்கையை விதைக்கும் வகையில் இப்பயணம் அமைந்திருந்தது. மோடியின் இலங்கைப்பயணம், இன்னல்களால் வாழ்க்கையைத் தொலைத்திருந்த தமிழர்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
கடந்த 2011-இல் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்க பிரதமர்மோடி நேரடியாக மேற்கொண்ட முயற்சி மீனவர்களிடையே புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
5 மீனவர்களை விடுதலைசெய்து இந்தியா அழைத்து வந்தது, வெளிநாட்டில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரை மீட்டது போன்ற சம்பவங்கள் மாநில மக்களிடையே பாஜகவின் செல்வாக்கை உயர்த்தி யுள்ளது.
தமிழர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அக்கறையோடு செயல் பட்டால் மாநிலத்தில் பாஜகவை வளர்ப்பது எளிதாக அமையும். பாஜக.,வின் சாதனைகளை தமிழக மக்களிடையே கொண்டுசெல்ல தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.