துணை ராணுவப்படை வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் களையப்படும்

 பணியின்போது, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் களையப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதியளித்தார்.

பணியில் தீரத்துடன் செயல் படும், உயிர்த்தியாகம் செய்தும் காவல் துறைக்கு பெருமை சேர்த்த வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி தில்லியில் மத்திய ரிசர்வ் காவல்படை சார்பில் வியாழக் கிழமை நடைபெற்றது. இதையொட்டி தெற்கு தில்லி வசந்த்விஹாரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் அலுவலக மைதானத்தில் வீரர்களின் அணி வகுப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, பணியில் தீரத்துடன் பணியாற்றிய படைவீரர்கள், அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி அவர் பாராட்டினார். நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

உள்நாட்டுப் பாதுகாப்பை நிலை நாட்டும் மத்திய துணை ராணுவப்படை, சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறது. எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கை முதல் பேரிடர் காலங்களில் மீட்புப்பணியில் ஈடுபடுவது வரை இப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் தீரத்துடன் எதிரிகளுடன் போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் உள்ளிட்ட மாவோயிஸ்டுகள் நடமாட்டம் காணப் படும் மாநிலங்களில் படைவீரர்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது. இரவு, பகல் பாராமல் எந்தநேரத்திலும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றக் காத்திருக்கும் இதன்வீரர்கள், பணிநேரம், மாறுபட்ட தட்பவெப்பம், ஆயுதக்குழுக்கள் உள்ளிட்டவற்றால் சந்திக்கும் பிரச்னைகள், குடும்பத்தை பிரிந்து இடமாற்றலின் பேரில் பணிபுரியும் சூழல்கள் உள்ளிட்டவற்றை நன்கறிந்துள்ளேன். இவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் நடவடிக்கைகளுக்கு உரியளவில் முன்னுரிமை அளித்துவருகிறேன். விரைவில் அவை களையப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தீரச்செயல் புரிந்த படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 83 பேருக்கு தீரச்செயலுக்கான குடியரசுத் தலைவரின் காவல்பதக்கம் வழங்கப்பட்டது. வீர மரணமடைந்த 8 பேரின் தியாகத்தைப் போற்றும் வகையில் பதக்ககங்களை அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டம், பாசு குடா-புஸ்பக்கா பகுதியில் 2012, ஆகஸ்ட் 14-ஆம் தேதி வீரமரணம் அடைந்த தமிழகத்தின் வேலூர்மாவட்டம், குப்பத்தா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த தலைமைக் காவலர் எஸ். பிரபுவின் தாய் பத்மா பதக்கத்தை பெற்றுக்கொண்டார். விருதைப் பெறும்போது அவர், "எனது மகனை நாட்டிற்காக தியாகம் செய்துவிட்டேன்' என்று தமிழில் கண்ணீர் மல்கத்தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...