இந்தியாவில் வசிக்கும் சிறுபான் மையின மக்கள் உட்பட அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் யுனெஸ்கோ தலைமையகம் உள்ளது. அதன் 70வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேற்று நடை பெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
“யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்துவது எனக்கு பெருமை அளிக்கிறது.இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினரின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு சம இடம் உறுதி செய்யப் படும். உலகில் தற்போது தீவிரவாதம் அதிகரித்துவருகிறது. வன்முறையும் பிரிவினையும் பெருகிவருகின்றன. இவற்றை கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மதங்கள் மூலமாக ஒடுக்கவேண்டும்.
பாரம்பரியமிக்க மண்ணில் நாங்கள் நவீன அரசை அமைத்துள்ளோம். எங்கள் பூமி, எல்லா தரப்பினரும் இணக்கத்துடன் வாழும் இடம். இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமைகளையும் மத்திய அரசு பாதுகாக்கும். அனைத்து மதத்தினரும் அவரவர் நம்பிக்கை, கலாசாரம், கோட்பாடுகளுடன் வாழ வழி வகை செய்யப்படும். அனைத்து மதத்தினருக்கும் சமமான இடம்கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஒருதேசத்தின் வலிமை ஒவ்வொரு குடிமகனும் கைகோத்து இணைவதை கொண்டே தீர் மானிக்கப் படுகிறது. நலிந்தோரையும் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றுவதை கொண்டே உண்மையான முன்னேற்றம் அளவிடப்படுகிறது. இந்தியாவில் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், கல்வி அளிக்கவும் தேசியளவிலான விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம் என அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி திட்டங்களை அரசு செய்துவருகிறது.
அறிவியல் என்பது இந்தியமக்களின் முன்னேற்றத்துக்கானது. அறிவியலே மனித குலத்தின் வளர்ச்சி என்று மகாத்மாகாந்தி கூறினார். அதை உறுதியாக பின்பற்றுகிறோம். அமைதியும், முன்னேற்றமும்தான் இந்தியாவின் எதிர்கால குறிக்கோள்.
கலாசாரம் என்பது உலகை இணைப்பதாக இருக்கவேண்டும், பிளவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்.
வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரங்களை கொண்டு முன் னேற்றத்தை எடை போடக்கூடாது. மக்கள் முகத்தில் தெரியும் நம்பிக்கை கீற்றைகொண்டு மதிப்பிடவேண்டும்.
மக்களின் வாழ்க்கை சூழலை மேம்படுத்த யோகாபயிற்சி மேற்கொள்வதை ஊக்குவித்து வருகிறோம். அந்த வகையில் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகாதினமாக அறிவிக்க ஐ.நா. சபையிடம் கேட்டு கொண்டோம். அதை ஐ.நா. சபை ஏற்று கொண்டுள்ளது.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.