சட்ட மன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயார்

 காஞ்சீபுரம் மாவட்ட பாஜக. செயற்குழு கூட்டம் காஞ்சீ புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்துகொண்டார். அதற்கு முன்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பாஜக.வில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடை பெற்று வருகிறது. எஸ்எம்எஸ். அழைப்புகள் மூலம் மட்டும் இது வரை 31 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கைக்கு கால அவகாசம் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 13ந் தேதி டெல்லியில் பாஜக. தலைவர் அமித்ஷா தலைமையில் மகாதொடர்பு இயக்க கூட்டம் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் குறித்தும் அவர்களது பங்கு குறித்தும் பயிற்சி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தமாத இறுதிக்குள் தமிழகத்தில் மாநில, மண்டல, கிளை அளவிலான மகாதொடர்பு இயக்கம் நடைபெறும். இது, வரும் 2016ம் ஆண்டு தமிழக சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தொண்டர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.

ஆந்திர வனப் பகுதியில் அப்பாவி 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அப்படி என்றால் இந்தமோதலில் எத்தனை போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இது திட்டமிட்ட படுகொலை.

கடத்தல் முதலைகளை தப்பிக்கவைக்க திசை திருப்பும் நாடகமாகவே இந்தசம்பவம் நடைபெற்றுள்ளது. இன்னும் 100-க்கும் மேற்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் குறித்தவிவரத்தை உடனடியாக சேகரித்து அவர்களை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களுக்கு போதிய வாழ்வா தாரத்துக்கு தமிழக அரசு எதையும் செய்யவில்லை. இதனால் தான் அவர்கள் ஆந்திராவுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பான உண்மை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவால், விவசாயிகளுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எப்போதுமே மோடி விவசாயிகளின் நண்பனாக இருப்பார். இதே போல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ரியல் எஸ்டேட்திட்டம், முத்ரா வங்கி திட்டம் போன்றவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக சட்ட மன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பாஜக. தயாராக உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.