தூய்மை பிரச்சாரத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டமும் உள்ளது

 நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி செய்துவரும் பிரச்சாரம், வெறும் குப்பை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்பு பற்றியதும் தான்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டி பேசினார்.

சுலாப் இன்டர்நேஷனல் சார்பில், 'தீண்டாமை இனி இல்லை' என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரத்தை மகாத்மாகாந்தி தொடங்கிவைத்தார். நமது பிரதமர் மோடிகூட, இந்திய நாட்டை தூய்மையாக்கும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார். தூய்மை பிரச்சாரம் என்பது வெறும்குப்பை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதில் தீண்டாமை ஒழிப்பு போராட்டமும் உள்ளது. தீண்டாமையை ஒழிக்க இந்தநாடு எவ்வளவோ நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இன்னும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை நாங்கள் செய்வோம். ஒவ்வொருவரையும் நாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

முன்னதாக தலித் பெண்களுடன் ஒன்றாக அமர்ந்து ராஜ்நாத்சிங் மதிய உணவு சாப்பிட்டார். இதுகுறித்து ராஜ்நாத் கூறுகையில், ''பெண்களுடன் ஒன்றாக நான் உணவு சாப்பிட்டேன். அவர்கள் என்னிடம்காட்டிய அன்பால் மிகவும் உணர்ச்சிவசப் பட்டேன். அந்தத் தருணம் எனக்கு வரலாற்று சிறப்புமிக்கது.

மக்களுக்குள் எந்தபேதமும் இருக்க கூடாது. உலகம் ஒருகுடும்பம். இதுதான் உலகத்துக்கு இந்தியா வழங்கும் முக்கிய செய்தி'' என்றார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...