தீவிரவாதிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் தனிமைப் படுத்த வேண்டும். முன்பு நாம் தீவிரவாதத்தைப் பற்றி பேசிய போது அதை சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகவே பொதுவாக மக்கள் கருதினார். ஆனால், இப்போது அது மனிதசமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டு ள்ளோம்.
எனவே, தீவிரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். தீவிரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் முற்றிலுமாக தனிமைப் படுத்த வேண்டும்.
மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வியை சமீபத்தில் ஜாமீனில் விடுவித்த , தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளுக்கு நாம் நெருக்கடி அளிக்கவேண்டும். அணு ஆயுதங்கள்தயாரிப்பு கூடாது என்பதில் உலகநாடுகள் எவ்வளவு தீவிரமாக உள்ளனவோ, அதேபோன்ற தீவிரத்தை தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பதிலும் காட்டவேண்டும். தீவிரவாதிகள் வளர்வது என்பது அணு ஆயுத உற்பத்திபோன்று உலகுக்கே பெரிய கேடுகளை விளைவிக்கும்.
தீவிரவாதம் என்பது என்ன என்பதை வரையறை செய்யும் நடவடிக்கை நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளது. தீவிரவாதம் என்பது என்ன என்பதை வரையறைசெய்து ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நாம் தீவிரவாதத்துக்கு எதிராக மக்களை எளிதாக ஒன்றுதிரட்ட முடியும். தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைதான் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் கொண்டுள்ளார். என்று பெர்லினில் நேற்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் பேசினார்
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.