சென்னையை அடுத்த எண்ணூர் காம ராஜர் துறைமுகத்தில் 'கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (விடிஎம்எஸ்)' எனும் புதிய தொழில் நுட்ப சேவையின் தொடக்கவிழா நடந்தது. விழாவில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலைகள் மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த புதிய சேவையை தொடங்கிவைத்தார்.
துறைமுகத்தில் நங்கூரம் இடும் பகுதிகள், பிறபகுதிகள், சேவைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளும், 30 கிமீ.க்கு உட்பட்ட கப்பல் அசைவுகளும் இந்த சேவையின் மூலம் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும். துறைமுக பகுதியில் ஏற்படும் ஆரம்ப கால எண்ணை கசிவினையும் இனி கண்டறிய முடியும். இதற்காக மிக உயர் அதிர்வெண் தொடர் அமைப்பு கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. தவிர, இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது குறித்து முன் கூட்டியே இந்த சேவையின் மூலம் அறியலாம். இந்தபுதிய சேவை ரூ.14.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில், எண்ணூர் காமராஜர் துறைமுக தலைவர்-மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.பாஸ்கராச்சார், பொது மேலாளர் (கடல்சார் சேவைகள்) கேப்டன் ஏ.கே.குப்தா, இயக்குனர் (செயல்) சஞ்சய்குமார், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-–
இந்தியாவில் முக்கியமானதும், பெரியதுமான துறைமுகங்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகமும் ஒன்று. இந்தியாவில் உள்ள 12 துறை முகங்களில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மட்டுமே தனியார் மூலம் செயல்பட்டு வருகிறது. மற்ற துறை முகங்களுக்கெல்லாம் சவால் அளித்திடும் வகையில் இந்த துறைமுகம் செயல்பட்டு வருகிறது.
கப்பல்கள் நிறுத்தப்படும் இடங்கள் தற்போது 2-ல் இருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2 கப்பல் நிறுத்தும் இடங்கள் அதிகரிக்கப்பட முயற்சி நடந்துவருகிறது. கடந்தாண்டை காட்டிலும் சரக்கு கையாளுகை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. துறை முகம் நன்றாக இயங்கிவருகிறது.
தற்போது, தொடங்கப்பட்டுள்ள வி.டி.எம்.எஸ். சேவை மிகவும் முக்கியமான, இந்த காலகட்டத்துக்கு தேவையானதாகும். கதிரலை கருவி, அதி நவீன கேமரா மூலம் கடலில் மிகப்பெரிய பரப்பளவு எல்லைகளை இந்த கருவி துல்லியமாக படமெடுக்கும் சக்தி கொண்டது. கடலில் எண்ணை கசிவு ஏற்படுவது என்பது நமக்கு மிகப்பெரிய தலைவலியாகவே இருந்துவந்தது. ஆனால், இந்த சேவை மூலம் இனி கடலில் ஆரம்பகட்ட எண்ணை கசிவு கண்டறியப் படுவதுடன், எந்தகப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்படுகிறது என்பதையும் கண்டறிய முடியும்.
இதன் மூலம் கடல் மாசு படுவதை தடுப்பதுடன், கசிவு ஏற்படுத்தும் கப்பல்கள் கண்டறியப்பட்டு உரிய இழப்பீடும் பெறமுடியும். மேலும், கடலில் வருகிற கப்பல்களில் என்ன சரக்கு இருக்கிறது? எவ்வளவு இருக்கிறது? என்பதையும் அறியலாம். இதன் மூலம் வேலை எளிதாக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான செயல்பாட்டில் நாட்டின் அனைத்து துறைகளுமே முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.