தன்னை பற்றிய அதிபர் ஒபாமாவின் கருத்துக்கள் மனதை தொடுவதாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அத்துடன் மோடி குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த கருத்துக்களும் அதில் இடம் பெற்றிருந்தன. அதில் : "டீக்கடைக் காரரான தனது தந்தைக்கு உதவி செய்வதன் மூலம் தனது குடும்பத்துக்கு உதவியாக இருந்தவர் மோடி. தற்போது அவர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக உள்ளார். டீக்கடை யிலிருந்து பிரதமர் வரையிலான அவரது இந்தவாழ்க்கை வரலாறு, இந்தியாவின் பேராற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது". என்று ஒபாமா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தன்னை பற்றிய ஒபாமாவின் இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் வலை தளத்தில், ஒபாமாவின் வார்த்தைகள் தன்னுடைய மனதை தொட்டு விட்டதாகவும், மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.