மோடி ‘இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி

 அமெரிக்காவில் இருந்து வெளிவருகிற பிரபல பத்திரிகையான 'டைம்'. ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களை தேர்வுசெய்து வெளியிட்டு வருகிறது. 2015–ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷிய அதிபர் விளாடிமிர்புதின், சீன அதிபர் ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பிடித்துள்ளனர்.ஒவ்வொரு தலைவர் பற்றியும்,

மற்றொரு தலைவர் குறிப்பு எழுதியுள்ளனர்.அதில் மோடியை , 'இந்தியாவின் தலைமை சீர்திருத்த வாதி' என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதி புகழாரம் சூட்டி உள்ளார்.

அதில் அவர் மேலும் கூறி இருப்பதாவது:–

சிறுவனாக இருந்த போது, நரேந்திர மோடி தனது குடும்பத்துக்கு ஆதரவாக தந்தைக்கு டீ விற்பனைசெய்ய உதவி இருக்கிறார். இன்றைக்கு அவர் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர். அவரது வாழ்க்கை, வறுமையில் இருந்து பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் எழுச்சியின் ஆற்றலையும் திறனையும் பிரதிபலிக்கிறது.

தனது பாதையில் ஏராளமான இந்தியர்கள் பீடு நடை போடுவதற்கு உதவுவதற்கு அவர் உறுதி பூண்டுள்ளார். வறுமைகுறைப்பு, கல்வி மேம்பாடு, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்குதல், பருவநிலை மாற்றத்துக்கு மத்தியிலும் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளத்தை கட்ட விழ்த்து விடுவதற்கு அவர் லட்சியதிட்டம் தீட்டி உள்ளார்.

இந்தியாவைப் போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் கடந்துசெல்கிறார். யோகா பயிற்சி செய்கிற அவர், இந்தியமக்களுடன் டுவிட்டரில் தொடர்பு கொள்கிறார். டிஜிட்டல் இந்தியாவை கற்பனைசெய்கிறார்.

அவர் வாஷிங்டன் வந்த போது, அவரும், நானும் டாக்டர் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் நினைவு சின்னத்துக்கு சென்றிருந்தோம். நாங்கள் மார்ட்டின் லூதர்கிங், மகாத்மாகாந்தி ஆகியோரின் போதனைகளை பிரதிபலித்தோம். எங்கள் நாடுகளில் உள்ள பன்முகத் தன்மையின் பின்னணி, மத நம்பிக்கை எப்படி போற்றி பாதுகாக்கத்தக்க வலிமை வாய்ந்தவை என்பதை விவாதித்தோம்.

100 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் இணைந்துவாழ்வது, உலகிற்கே ஊக்கம் தரத்தக்க எழுச்சியூட்டும் முன் மாதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார்.என்று அவர் அதில் எழுதி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...