அதிமுக., திமுக.வுடன் தேர்தல் கூட்டணி வைக்கமாட்டோம். தனித்தே போட்டியிடுவோம். தமிழகத்தில் எப்போது தேர்தல்வந்தாலும் சந்திக்க தயார் என்று மதுரையில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
பாரதீய ஜனதா கட்சியின் மையக் குழு கூட்டம் தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக நடக்கிறது. நேற்று சேலத்தில் கூட்டம் நடைபெற்றது. இன்று மதுரையில் கூட்டம் நடக்கிறது.
இந்தகூட்டத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். உறுப்பினர் சேர்க்கை நீட்டிப்புகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பாரததேசம் முழுவதும் மகா மக்கள்தொடர்பு இயக்க திட்டம் பாஜக.,வால் தொடங்கப்பட இருக்கிறது. இந்ததிட்டம் மூலம் யார் யாரெல்லாம் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக சேர்ந்தார்களோ அவர்களுக்கு தனித் தனியாக உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவதோடு பாரதீய ஜனதாவை மேலும் பலம் பொருந்திய கட்சியாக உருவாக்கும் வகையில் மத்திய அரசின் சாதனைகள் எடுத்து சொல்லப்படும்.
மக்களோடு மக்களாக இணைந்து மக்களின் நலனுக்காக செயல்படும் திட்டம் தான் இந்த திட்டம். தமிழகத்தில் பா ஜ க வின் 42 மாவட்டங்களில் இந்ததிட்டம் தொடங்கப்பட உள்ளது. அடுத்தமாதம் (மே) 2–ந் தேதி சென்னையில் இந்ததிட்டம் தொடங்கப்படுகிறது. வாரத்தில் சனிக்கிழமை தோறும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் மகா மக்கள்தொடர்பு இயக்க திட்டகூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கலாம். அவை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.
தமிழக அரசை மக்கள் தொடர்புகொள்ள முடியவில்லை. யார் முதல்வர் என்றும் தெரியவில்லை. மாநில அரசை மக்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில் மத்திய அரசு மக்களை தொடர்புகொண்டு மக்களுக்காக உதவிசெய்யும் வகையில் மகா மக்கள்தொடர்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் ஒரு மாற்றுசக்தி தேவைப்படுகிறது. எல்லாத் துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. எல்லா துறையினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராடியும் வருகின்றனர்.
சட்ட சபை தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. இடையில் தேர்தல் வருவதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டி யிடுவோம். அதிமுக., திமுக.வுடன் கூட்டணி வைக்கமாட்டோம். கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா பலமான வாக்குகள் பெற்றுவிடக் கூடாது என கருதி மாற்றுக்கட்சிகள் மாற்றுக் கருத்தை விதைத்து வந்தார்கள். இனிமேல் அப்படிசெய்ய முடியாது. இப்போது மக்கள் தெளிவாக உள்ளனர்.
தாலி அகற்றும் போராட்டம் நடத்தி மக்களின் உணர் வோடு வீரமணி விளையாடி வருகிறார். பெண்கள் மீது அக்கறை இருந்தால் அவரதுசொத்தை பெண்களுக்கு கொடுக்கலாம். அவரதுகட்சியில் பெண்களுக்கு பொறுப்பை கொடுக்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் பேசும் போது, இந்தியாவில் ஊழலை ஒழித்துவிட்டோம் என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது. இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டுகிறது. ஆனால் மோடியின்பேச்சால் இந்தியா தலை நிமிர்ந்துதான் உள்ளது. 50 நாட்கள் உல்லாச பயணம் சென்றுவிட்டு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல் ராகுல் காந்தி நாடு திரும்பி இருக்கிறார்.என்றார் .
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.