பிரதமரை விமர்சிப்பதற்கு இளங்கோவனுக்கு எந்த தகுதியும் இல்லை

 பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எந்த தகுதியோ, அருகதையோ இல்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:- நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் இந்தியாவில் உள்ள எந்த விவசாயிக்கும் பாதிப்பு ஏற்படாது. கையகப் படுத்தப்படும் நிலத்திற்கு உரியதொகைகளை மத்திய அரசு நிச்சயம் வழங்கும்.

ஒருமடங்கிற்கு நான்கு மடங்கு தொகை தருவதற்கும் மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப் படுவதன் மூலம் இந்தியாவில் தொழில்வளம் பெருகும். விவசாயிகள், வர்த்தகர்கள் உட்பட அனைத்துபிரிவு மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய நல்ல சட்டம்தான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், சில எதிர் கட்சிகள் தான் தேவையில்லாமல் அரசியலுக்காக இந்த சட்டத்திற்கு எதிராக கூச்சலிடுகிறார்கள். இது சரியல்ல.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொறுப் பேற்ற நாள் முதல் பாஜக.,வுக்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார். மோடியை விமர்சிப்பதற்கான தகுதியோ, அருகதையோ இளங்கோவனுக்கு இல்லை.

இளங்கோவன் போன்று தரம்தாழ்ந்த அரசியலை பிஜேபி ஒருபோதும் நடத்தாது. அப்படிப்பட்ட அரசியலை மக்களும் விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டில் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் நீர்வழி போக்குவரத்தை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது.

மத்திய அரசு இதற்கான அனைத்து பூர்வாங்க பணி களையும் முடித்துள்ளது. விரைவில் திட்டப்பணிகள் தொடங்கப்படும். 2016-ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பாஜக தலைமைதான் முடிவுசெய்யும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...