தமிழகத்துக்கு நல்லது செய்வதாக பிரதமர் உறுதியளித்தார்

 திமுக,, பாஜக உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்ற தே.மு.தி.க தலைவர் விஜய காந்த், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து காவிரியில் அணைகட்டுவதை தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார்.

பிரதமரை சந்திப்பதற்காக விஜயகாந்த் நேற்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சிசிவா, காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமச் சந்திரன், ஊடக பொறுப்பாளர் கோபண்ணா, தமாகா சார்பில் எஸ்ஆர்.பாலசுப்ர மணியம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி, ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், புதியதமிழகம் சார்பில் விஜய குமார் ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் தனித்தனியாக டெல்லி சென்றனர்.

அங்கு விஜய காந்த் தலைமையில் அனை வரும் ஒன்றாக இணைந்து நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். தமிழக குழு வினருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் சென்றிருந்தார். அப்போது, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கப் பட்டது.

அந்தமனுவில், 'காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது. ஆந்திர மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு அந்தமாநில அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகளில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

பிரதமரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் விஜய காந்த் கூறியதாவது:

எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறினார். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பேசுவதாகவும் தெரிவித்தார். 'நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் பாதிப்பு வராது. தனியார் யாரும் நிலத்தை கைப்பற்ற மாட்டார்கள். நிலத்தை அரசுதான் கையகப்படுத்தும். அந்த நிலங்களில் அரசு மருத்துவமனைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்படும்' என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

மேலும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் என்றும் கூறினார். பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை. தமிழகத்துக்கு நல்லது செய்வதாக பிரதமர் உறுதியளித்தார். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...