என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே அமைச்சரவைவிவகாரம் தொடர்பாக இழுபறி நீடித்துவரும் நிலையில், டெல்லி விரைந்த புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நமச்சிவாயம் தேசியதலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் கைபற்றின. இந்த கூட்டணிக்கு புதுச்சேரியில் தலைமைவகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என ரங்கசாமி உறுதி அளித்தாலும் அமைச்சரவை பதவியேற்க முடியவில்லை.
புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்ற தினத்திலேயே, செய்தியாளர்களை சந்தித்த மத்தியஅமைச்சர் கிஷன்ரெட்டி மற்றும் பாஜக தலைவர்கள் பாஜகவுக்கு ஒரு துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவி ஏற்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்துள்ளோம் என தெரிவித்தனர்.
ஆனாலும், என்.ஆர் காங்கிரஸ் தரப்பில், அமைச்சரவை விரிவாக்கம்குறித்த எவ்வித தகவலும் தெரிவிக்காமல் இருந்துவருகின்றனர். இதனிடையே மத்திய அரசுமூலம் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து தனது பலத்தை 9 ஆக பாஜக உயர்த்தியது.
அத்துடன் இம்முறை தேர்தலில் 6 சுயேச்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் 3 பேர் பாஜகவுக்கு ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் பாஜகவின் பலம் 12 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக,புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை கட்சிதலைவர் நமச்சிவாயம், பொதுச்செயலர் செல்வம் எம்எல்ஏ ஆகியோர் திடீரென டெல்லி புறப்பட்டுசென்றனர்.
அவர்கள் இன்று மாலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்துp பேசினர். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பற்றியும், புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்தும் விவரித்தனர். அதனை நட்டா கேட்டறிந்தார்.
மேலும் புதுச்சேரி பாஜக சார்பில் நோயினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களின் இந்த திடீர் சந்திப்பினால் புதுச்சேரி அரசியல்வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
1restriction