சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் மோடி கடந்தவாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவரை 2 ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்ற போது அணிந்திருந்த உடைதொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா, பஸ்தர் மாவட்டங்களில் பிரதமர் மோடி கடந்த வாரம் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது தண்டேவாடாவில் மோடியை அந்த மாவட்ட ஆட்சியர் கே.சி. தேவ் சேனாதிபதியும், பஸ்தரில் அந்தமாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியாவும் வரவேற்றனர்.
அப்போது, தண்டே வாடா மாவட்ட ஆட்சியர் கே.சி. தேவ்சேனாதிபதி, வெள்ளை நிறமேல்சட்டையும், பேண்ட்டும் அணிந்துள்ளார். பஸ்தர் மாவட்ட ஆட்சியர் அமித்கட்டாரியா, குளிர் கண்ணாடிகளும், ஊதா நிறத்திலான மேல் சட்டையும் அணிந்துள்ளார். அரசு விதிப்படி, இந்த வரவேற்பின் போது அவர்கள் இருவரும் "பந்த் காலா' எனப்படும் கோட்சூட் அணிந்திருக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு சத்தீஸ்கர் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்டாரியாவுக்கு சத்தீஸ்கர் அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், "பிரதமரை நீங்கள் வரவேற்ற போது, முறைப்படி ஆடையணியாததும், குளிர்கண்ணாடி அணிந்ததும் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில், இதுபோன்று விதிகள், மரபுகளை மீறவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், தேவ்சேனாதி பதிக்கும் எச்சரிக்கை விடுத்து சத்தீஸ்கர் அரசு கடிதம் அனுப்பி யிருக்கிறது. இது குறித்து சத்தீஸ்கர் மாநில பொதுநிர்வாகத்துறை சிறப்பு செயலர் டி.டி. சிங் கூறுகையில், "பிரதமரை வரவேற்ற போது, மாவட்ட ஆட்சியர்கள் இருவரும் முறைப்படி ஆடை அணியாதது குறித்து தகவல்கிடைத்ததும், அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எதிர் காலத்தில், இது தொடர்பான நடைமுறைகளை கடைபிடிக்கும்படி அவர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது' என்றார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.